சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - ரிஷபம்

விருப்பமான விடயங்களை தெளிவுபடுத்தும் ரிஷப ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்து விரைய, சுக, களத்திர ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் தொழில் வளர்ச்சிக்கும், கூட்டு தொழிலுக்கும் மேன்மையை பெற்று தருவார். உங்களின் யோகாதிபதி சனி என்பதால். உங்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு கூடுதல் நல்ல பலன் பெற்று தருவார். தொழிலாளர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மூலம் அரசியல் தொடர்புகள் உண்டாகும். சிலருக்கு அரசியலில் புதிய வாய்ப்பு கிடைக்க. பயணம் செய்ய வேண்டி வரும். ஜாதகத்தில் சனி பலம் பெற்றிருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட பொருட்கள், பணம் கிடைக்கப் பெறுவீர்கள். சொந்த விடு கனவு நனவாகும்.
இந்த ஆண்டு குரு விரையத்தில் வருவதால், விரைய செலவுகள் வரும் என்பதால் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது நல்லது. வீடு கட்டும் பணி சிறப்பாக அமையும். தங்க நகை அடவு போகும். பெண்களுக்கு திருமண தடை நீங்கி, திருமணம் நடக்கும். உங்களின் ராசிநாதன் இருக்கும் இடத்தை பொருத்து உங்களின் பொருளாதார நிலை மேன்மை அமையும். ஆன்மீக பயணம் மேற்கொண்டு, தொண்டு செய்யும் நல்ல வாய்ப்பைப் பெறுவீர்கள். கலைதுறையினருக்கு வெளிப்படையான வளர்ச்சி இருக்கும். கடினமான உழைப்பால் வளம் பெறுவீர்கள். பெண்களுக்கு ஆசைபட்ட வாழ்க்கை அமையும். உங்களை மதித்து நடக்கும் உறவினர்களின் உறவை பலபடுத்திக் கொள்வீர்கள்.
இந்த ஆண்டு ராசி / கேது பெயர்ச்சிக்கு பின்பு வெளிநாட்டு தொடர்புகள் மூலம் தொழில் வாய்ப்பை பெறுவீர்கள். முக்கிய தொழிலில் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சிறு வியாபாரிகளுக்கு தொழில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் பெருகும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, நீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்கள்:
5, 6, 8.
இந்த ஆண்டு நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரையும், வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடுகளும் தொடர்ந்து வேண்டிவர உங்களின் சகல காரியமும் அனுகூலமாக அமையும்.