சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மேஷம்

சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மேஷம்

வைராக்கியமும், மனவலிமையும் கொண்டு விளங்கும் மேச ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு 22.04.2023ல் குரு பெயர்ச்சியாகி வருவதும், ஆவணி மாதத்தில் ராகு / கேது பெயர்ச்சியாவதும் உங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும்.
 
தமிழ் புத்தாண்டு முதல் உங்களின் வாழ்க்கை அபரிமிதமான வளர்ச்சியை பெறும். இதுவரை விரைய குருவாக இருந்த குரு பகவான், ஜென்ம குருவாக அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும், முக்கியமாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை இடுவதும் நற்பலன்களை பெற்று தரும். குரு உங்களின் ராசிக்கு பாக்கியஸ்தானதிபதி, விரையாதிபதியாக இருப்பது குரு பெயர்ச்சி மூலம் தன் வீட்டுக்கு தன ஸ்தானத்திலும், பூர்வ புண்ணியஸ்தானத்திற்கு உரிய ராசி என்பதால் குரு பெயர்ச்சி நல்ல விசேஷமான பலன்களை தரும். தொழிலில் முன்னேற்றம், புதிய தொழில் வளர்ச்சியைப் பெறுவதும். வேலை வாய்ப்பு அமையும். தந்தை வழி சொத்து பிரச்சனை தீர்வாகும். திருமண வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
 
ஏற்கனவே சனி உங்களுக்கு லாபஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதும், அட்டம ஸ்தானத்தைப் பார்ப்பதும், உங்களின் அனைத்து வளர்ச்சிகளுக்கும், நல்ல பலனையும், ஆயுள் விருத்தியும், நோய் தீர்க்கும் வாய்ப்பையும் தரும்.  உங்களின் ஜாதகத்தில் சனி நீசம் பெற்றிருந்தால் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. மற்றவர்களுக்கு சிறப்பான நற்பலன்களை பெற்றுத் தரும்.
 
ராகு / கேது பெயர்ச்சி மூலம் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பழைய கடன் தீர்க்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். தொலை தூர செய்திகள் உங்களின் வாழ்க்கைக்கு பெரும் உதவியாக அமையும் வெற்றி மேல் வெற்றியை பெறும். சந்தர்ப்பம் அமைய பெறுவீர்கள். பொருளாதார மேன்மை பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ஓரஞ்சு, மஞ்சள், நீலம்.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
3, 8, 9.
 
இந்த ஆண்டு நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியர், மாரியம்மன் வழிபாடு செய்து, விளக்கு ஏற்றி வழிபட்டு வர, சகல காரியமும் ஜெயம் தரும்.