சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மீனம்

சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மீனம்

ஆர்வத்துடன் எதையும் செய்து வளம் பெறும் மீன ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு விரைய சனியாகவும், ஜென்ம குரு தன குருவாகவும் விடுவதும். இந்த ஆண்டு மத்தியில் ராகு / கேது ஜென்ம ராகு களத்திர கேதுவும் அமைவதும். உங்களின் வாழ்க்கைக்கு நல்ல படிப்பினையாக அமையும். எதையும் அகலக்கால வைக்காமல் நிதானமாக செல்வதும் இருக்கும். தொழிலில் சிறப்பாக அமைத்து கொள்வதும் தங்களின் மீதுள்ள நம்பிக்கை எப்பொழுது வைத்து செயல்படுவதும், உங்களின் வாழ்க்கை நல்ல வளம் பெறுவீர்கள். பிறரிடம் எந்த உத்திரவாதமும் கொடுக்காமல் எதையும் யோசித்து சொல்வதும், செயல்படுவதும் நல்லது. பணியிலிருப்பவர்கள் மேலாதிகாரிகளிடம் சற்று நிதானமான போக்கை கடைபிடிப்பதும் அனுசரித்து செல்வதும் நல்லது. கலை துறையினர் தங்களின் கட்டுபாட்டில் இருக்கும். 
 
அனைத்து வித காரியங்களை கவனித்து செய்வதுடன் பிறரின் பொறுப்பில் வரும் போது அதனை கண்காணித்து செயல்படுவது நல்லது. விரையாதிபதியே விரைய ஸ்தானத்தில் அமர்வதால் சுப விரையமாக அதை அமைத்து வீடு கட்டுதல், காணி நிலம் வாங்கிப் போடுதல் போன்ற விடயங்களின் பெண்ணுக்கு திருமணம் நடத்துதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவது மிக சிறந்தது. 
 
வெளிநாடு செல்ல நல்ல நேரமாக அமையும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தால் இன்னும் நல்ல பலன் தேடி வரும். ஆன்மீக தேடலில் இருப்பவர்களுக்கு நல்ல ஆசான் அமைய பெறுவார். நினைத்தபடி சிலருக்கு மகானின் ஆசி கிடைக்கும். புதிய அனுபவமும், அறிவியல் விடயங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். அரசியலில் ஒதுங்கி சில காலம் இருப்பது நல்லது. மேலும் வாழ்வில் தேவையற்ற செலவுகள் வரும் என்பதால் தவிர்க்கவும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.

அதிர்ஷ்ட எண்கள்:
 
1, 3, 9.
 
இந்த ஆண்டு நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ஆஞ்சநேயரையும், வைரவரையும் வணங்கி வெற்றிலை மாலை சாத்து மெழுகு தீபமேற்றி வணங்கி வாழைபழம், எள் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள சகல கஷ்டங்களும் நீங்கி சுபிட்சம் பெறுவார்கள்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554