சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மகரம்

சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மகரம்

திறமையும், பொறுமையும் கொண்டு விளங்கிடும் மகர ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு பாத சனியாகி விடுவதும் குரு நான்காமிடத்திற்கு பெயர்ச்சியாவதும் ஆண்டு இறுதியில் ராகு / கேது  பெயர்ச்சி யோக ராகுவாகிவிடுவதும் உங்களின் கடந்த கால பல சிரமங்கள் விலகி நன்மையுண்டாகும். வெளியூர் பணியில் சிறப்பாக செய்து பாராட்டு பெறுவீர்கள். எதிலும் உங்களின் திறமையால் முன்னேற்றம் காண்பீர்கள். 
 
இதுவரை வெளிபடுத்தாமல் இருந்த அனைத்து திறமைகளையும் வென்று சிரமத்திலிருந்து மீண்டு வருவீர்கள். செய்து வரும் தொழிலில் இருந்த தொய்வு நிலை மேன்மை அடைந்து வளர்ச்சியை பெறும். விளையாட்டு துறையில் முக்கியமான இடத்தை பெறுவீர்கள். கலை துறையினருக்கு நல்ல வரவேற்பு இருக்கும். சாதாரண மக்கள் மத்தியில் அரசியல் தலைமையில் இருப்பவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும். குடும்பத்திலும் இருந்து வந்த சச்சரவு நீங்கி நன்மையையும், பொருளாதாரத்தில் வளமும் பெற்று வருவீர்கள்.
 
புதிய தொழில் வாய்ப்புக்கு சில காலம் தள்ளி போடுவது நல்லது. உங்களின் திறமை மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டாகும். எதையும் எளிதில் புரிந்து கொள்தல், எதற்கு பயமின்றி செயல்படுதல் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் சிலருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வரவுக்கு தகுந்த செலவுகளை திட்டமிட்டு செயல்பட்டு கட்டுப்படுத்திக் கொள்வீர்கள்.
 
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள். அதற்கான நேரமாக இது அமையும் என்று நம்பிச் செயல்படுவீர்கள். உங்களின் லட்சிய பயணம் சிறக்க உதவிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இளைய சகோதரின் மூலம் உங்களின் வாழ்வு நல்ல வளம் பெறும். தேவைகளுக்கு வருமானம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
 
நீலம், வெண்மை, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
3, 6, 8.
 
இந்த ஆண்டு நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை வைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு எள் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும். தீர்த்த யாத்திரை சென்று புனித நீராடினால், உங்களின் சகல தோசமும் நீங்கும்.