சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - கும்பம்

கிடைத்ததை வைத்து சிறக்க வாழ வேண்டும் என நினைக்கும் கும்ப ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசியில் ராசிநாதன் சனி பகவானும். தனஸ்தானாதிபதி மூன்றாமிடத்திலும். தனஸ்தானத்தில் ஆண்டு இறுதியில் ராகுவும் பெயர்ச்சியடைவது உங்களின் அன்றாட பணிகளில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். எதை செய்தாலும் நிதானமும், செயலில் விவேகமும் இருக்கும்படி செயல்படுவது நல்லது. இதுவரை விரைய சனியாக இருந்த பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தந்து வந்த சனிபகவான், இனி தொழிலிலும். பொருளாதாரத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகச் செய்வார். திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடக்கும். முக்கியமான அரசியல் பிரமுகர்களுக்கு உயர்பதவிகளும். தனி அந்தஸ்தும் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராத விதமாக அமையும். சொந்த இடத்தில் பணம் வந்து சேரும். யாரையும் நம்பி எந்த தொழிலும் செய்யாமல் முழுமையாய் உங்களின் மீது நம்பிக்கை வைத்து எந்த தொழில் செய்தாலும் அதில் வெற்றியை பெறுவீர்கள்.
முக்கியமான சில ரகசியங்களை பற்றி தெரிந்து கொள்ளும் சூழ்நிலை அமையும். ஓன்லைன் வர்த்தகம் ஒரு நேரம் நல்ல வளர்ச்சியும், ஒரு நேரம் வீழ்ச்சியும் பெறும். வர்த்தகத்தில் கவனமுடன் இருந்தால் சிறப்பாக அமையும். சிறு வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
கடன்பட்ட சிலருக்கு சிறு கடன் தீரும். வீடு கட்டுவதற்கு முயற்சிகளில் நல்ல வளர்ச்சி இருக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகளும், பாராட்டுதல்களும் அமையும். மாணவர்கள் கல்வியில் மேன்மை பெற்று தேர்வில் வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு திருமண காரியமும் சீக்கிரம் நடக்கும். புதிய தொழில் வாய்ப்பு பெண்களுக்கு அமையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்கள்:
3, 6, 8.
இந்த ஆண்டு நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை வைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து விளக்கு எண்ணெய் தீபமும் இட்டு வழிபட்டுவர சகல காரியமும் சாதகமாக அமையும். பொருளாதாரம் சிறக்கும்.