சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - தனுசு

சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - தனுசு

தன்னம்பிக்கையும், உறுதியும் கொண்டு செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு சனி யோகச்சனியாகவும், குரு பார்வையும் பெறுவது நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இதுவரை ஏழரை சனி தாக்கத்தால் பல்வேறு துன்பங்களை அடைந்த உங்களின் நிலை இனி யோக சனியால் மனவலிமை பெற்று எதையும் துணிச்சலுடன் செயல்படும் தைரியம் உண்டாகும். குடும்பத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் மனகசப்பு தேவையற்ற சச்சரவுகளிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறும் வாய்பைப் பெறுவீர்கள். 
 
மனதில் எதை முடிவு செய்தாலும் அதை செய்து முடித்து விடுவீர்கள். காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் அதற்கு தகுந்தபடி சூழ்நிலைகளை மாற்றி அமைத்து கொள்வீர்கள். புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது போல எத்தனை துன்பம் வந்தாலும் உங்களின் கொள்கையிலிருந்து பின் வாங்க மாட்டீர்கள். எதையும் நேர்மையாக செய்ய வேண்டுமென்று விரும்புவீர்கள். சனி பகவான் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு தனி திறமையுடன் செயல்படும் முக்கியத்துவம் இருக்கும். 
 
குரு உங்களின் ராசிநாதன் என்பதால் குரு ராசியை பார்ப்பதும் நற்பலன்கள் அமையும். உங்களின் ராசிக்கு பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்ப்பதால் உங்களின் தொழில் சிறப்பாக அமையும். கடந்த காலத்தில் பட்ட கஷ்டங்களுக்கு விடியலை பெற்று தரும். எதிலும் வெற்றியை பெறுவீர்கள். 
 
கலைதுறையில் நல்ல முன்னேற்றமும், புதிய ஒப்பந்தங்களும் உண்டாகும். நிலையான தொழில் வாய்ப்புகள் அமைய பெறுவீர்கள். அரசியலில் சிறந்த ஆலோசராகவும், கருத்துகளை தெளிவாக உணர்த்துவதில் வல்லவராகவும் திகழ்வீர்கள். பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
1, 3, 9.
 
இந்த ஆண்டு நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் மாரியம்மன் வழிபாடு செய்து விளக்கெண்ணெய் தீபமிட்டு வணங்கி வேண்டிவர சகல காரியம் நினைத்தபடி சிறப்பாக அமையும்.