2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மகரம்

2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மகரம்

விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு விளக்கும் மகர ராசி வாசகர்களே!
 
இந்த குரு பெயர்ச்சிக்கு முன்பு வரை உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் அமர்ந்து உங்களின் லாபஸ்தானத்தை பார்வை இட்டு வந்த குரு, இனி வரும் 22.04.2023 இரவு முதல் சுகஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் மறைவு ஸ்தானங்களையும், தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மகர ராசிக்கு குரு பாவி என்பதால், மறைந்தாலும் பலன் தருவார். பார்த்தாலும் பலன் தருவார் என்பதால் குரு மறைவிடங்களை பார்ப்பது, உங்களின் நீண்ட கால வழக்குகளில் விடுதலை கிட்டும். தொழில் இல்லாமல் இருப்பவருக்கு தொழில் அமையும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவருக்கு விரைவில் அனுமதி கிடைக்க பெறுவீர்கள். எதையும் நடப்பு காலத்தையும் அனுசரித்தே எல்லா வேலைகளையும் செய்து வருவீர்கள்.

தொழிலாளர்களின் வேலை பளுவிற்கு விரைவில் தீர்வு உண்டாகும். மருத்துவத்துறையில் முன்னேற்றம் காண்பீர். கலைத்துறையில் உங்களின் திறமையால் முன்னேற்றம் காண்பீர்கள். சுதந்திரமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். இதுவரை குருவால் எந்த பலன் அடையாமல் இருந்தவர்களுக்கு இனி பல்வேறு நற்செய்திகள் உண்டாகும்.

குறைந்த நேரத்தில் உங்களின் பணியை விரைவில் முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு திடீர் பதவி உயர்வும், முக்கிய பொறுப்புகளும் உண்டாகும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். குல தெய்வ வழிபாடுகளை செய்வதன் மூலம் உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் வளர்ச்சியைப் பெறுவீர்கள்.

வெளிநாட்டு தொழில் மூலம் சிலர் வருமானத்தை பெருக்கி கொள்வீர்கள். பெண்களின் திருமண காரியம் விரைவில் அமையும். உங்களின் எதிர்ப்பு குறைந்து சரியான வழியை தேடி சென்று தொடர்ந்து முன்னேற்றம் பெறும். வாய்ப்புகள் அமைய பெறுவீர்கள்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவிற்கு மூன்று விளக்கு நெய் தீபமேற்றி மூன்று முறை நவகிரகத்தை சுற்றி வர, உங்களின் அனைத்து காரியமும் வெற்றியைத் தரும். பொருளாதாரம் பெருகும்.