2023 - 2024 குரு பெயர்ச்சி பொது பலன்கள்

2023 - 2024 குரு பெயர்ச்சி பொது பலன்கள்

இந்த ஆண்டு வரும் 22.04.2023 அன்று சனிக்கிழமை இரவு 11.27 மணிக்கு ரேவதி 04-ம் பாதம் மீன ராசியிலிருந்து, மேஷ ராசி அசுபதி 1ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சியாகிறார்.

கால புருச தத்துவ படி இதுவரை விரைய ஸ்தானத்தில் இருந்த வந்த குரு பகவான், இனி கால புருச தத்துவப் படி முதல் வீட்டில் அமர்வதால், தங்கம் விலை சற்று குறையும். பல நாடுகளில் டொலர் மதிப்பு குறையும்.

வங்கிகளில் கடன் பெறுவதில் சில தளர்வுகள் உண்டாகும். அதன் மூலம் எளிதில் கடன் பெறும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு உதவிகள் கிடைக்க பெறுவதும். வெளிநாட்டு தொழில் மூலம் அன்னிய செலாவணிகள் உயர்த்தி கொள்வதும் உண்டாகும். 
 
வாயுவிற்கு உரிய கிரகம் என்பதால் மேக மூட்டமும், தேவைக்கு மழை பொழியும் - நீர் நிலைகளில் நீரைத் தேக்கி கொள்ளும் அளவுக்கு மழை பெய்யும். சீதோஷண நிலைகளில் மென்மையான சூழ்நிலை உருவாகும். நாட்டின் பொருளாதார

வளம் பெருக்கி கொள்ள உலக வங்கியும், சர்வதேச வங்கிகளும் உதவி செய்து மேன்மை பெறும். தகுதியுள்ளவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை மற்றும் தொழில் செய்து கொள்ள வாய்ப்புகளை பெறுவார்கள். கடல் மீன்களில் பெருக்கம் அதிகம் உண்டாகும்.

இதனால் பொருளாதாரம் வளம் பெறும். உயர்கல்விகளில் சில புதிய மாற்றம் உண்டாகும். விவசாய நிலங்களுக்கும் சில சலுகைகளை அரசு அறிவிக்கும். அரசியலில் புதிய கூட்டணி அமையும். உறுதியான அரசு அமையும் வகையில் செயல்பாடுகள் இருக்கும்.

வெளிநாட்டு பொருளாதார நிபணர்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியும், ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்புகள் பெற்று நாட்டின் முன்னேற்றம் சிறக்கும். தங்கத்தை சேமித்து வைத்து, பொருளாதாரத்தை தக்க வைத்து அரசு செயல்படும்.