2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - விருச்சிகம்

2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - விருச்சிகம்

நினைத்ததை குறித்த நேரத்தில் செய்து முடிக்க துடிக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுமிடம் சிறப்பாகவும். அதிசார குரு பார்வை ராசியை பார்ப்பதும் நன்மையை தரும். ஜென்ம கேது மார்ச் மாதத்தில் விரைய கேதுவாக வருவதும் ராகு சத்ரு ஸ்தானத்தில் அமைவது நன்மையை பெற்று தரும். மூன்றாமிட சனி உங்களின் காரியத்தை வெல்ல உதவியாக அமையும். ஜுலை மாதத்தில் சனி அர்த்தாஷ்டம சனியாக வருவது உங்களின் வளர்ச்சிக்கு சிறிய தடையை தருவதுடன் உடல் நலனில் கவனிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இருந்தாலும் குரு பார்வை பெறும் போது பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். இந்த நன்மையும், தீமையும் கலந்தே வந்தாலும் உங்களின் ராசிநாதன் செவ்வாய் பார்வை ராசிக்கு படும் போது நல்ல வளர்ச்சியையும். எதிரிகளிடமிருந்து விடுதலையும் பெறுவீர்கள். தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு உதவியை செய்வீர்கள். அவர்களின் உரிமைக்கு குரல் கொடுத்து அதனை பெற்று தருவதில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். விளையாட்டு துறை, காவல் பணியில் சிறந்து விளங்குவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
சலனமான எண்ணம் உருவாகும். பண பிரச்சனை மனதில் கவலை பெற்று தரும். எதற்கு கவலைபடுகிறோம் என்பதை உணரமுடியாமல் போகும்.
 
நட்சத்திர பலன்கள்:
 
விசாகம் 4ம் பாதம்:
 
அமைதியாக எதையும் செய்வீர்கள். தொழிலில் கஷ்டப்பட்டு முன்னேறுவீர்கள். உறவுகளில் சிலர் புரிந்து கொள்ளமுடியாத படி நடந்து கொள்வார்கள். அனுசரித்து செல்வீர்கள்.
 
அனுசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
தொழில் உறவுகளை மேம்படுத்தி கொண்டு செயல்களை துரிதப்படுத்துவீர்கள். வெளியூர் பயணம் பயனுள்ளதாக்கிக் கொள்வீர்கள். இடத்திற்கு தகுந்தபடி சூழ்நிலை மாற்றிக் கொள்வீர்கள்.
 
கேட்டை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
காலத்தை அறிந்து செயல்படுவீர்கள். யாரையும் தேவையின்றி பகைத்து கொள்ளமாட்டீர்கள். சாதுர்யமாக பேசி காரியத்தை செயல்படுத்துவீர்கள் தேவைகளுக்குகான வருமானம் இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மஞ்சள், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, மேற்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட திகதிகள்: 3, 5, 9.

இந்தாண்டு முழுவதும் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
சனி, ஞாயிறு கிழமைகளில் பைரவருக்கு 3 தீபம் நல்லெண்ணெயில் ஏற்றி ராகு காலத்தில் தொடர்ந்து வணங்கி வர அனைத்து காரியமும் சிறப்பாகவும், சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்றுத் தரும்.