2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - துலாம்

2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - துலாம்

காலம் அறிந்து செயல்பாடுகளை துரிதமாக செய்யும் துலாம் ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், யோகாதிபதி சனி, பார்வையை பெறுவதும் உங்களின் லட்சிய கனவுகள் நிறைவேறும். தனியாக உங்களின் செயல்பாடுகள் இருந்து வந்த போதிலும் உங்களுக்கு சிலருடைய உதவியும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய திட்டங்களை தேர்வு செய்து வளம் பெறுவீர்கள். காரியத்தில் கவனமுடன் செயல்பட்டு எதையும் செய்து முடிப்பீர்கள். புரியாத சில விடயத்தை கையாளும் விதத்தில் செயல்பட்டு, அதனையும் சிறப்பாக செய்வீர்கள். நல்லவர்களின் சேர்க்கையும் அவர்களின் ஆலோசனையும் உங்களை ஊக்கபடுத்தும். இழந்த சில விடயங்களை மீண்டும் உயிர்பித்து வளம் பெறுவீர்கள். சில நேரம் செவ்வாய் பார்வை ராசிக்கு கிடைக்கும் போது வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் சிலருக்கு அமையும். திருமண தடை நீங்கி வளம் பெறுவீர்கள். கேது / ராகு பெயர்ச்சிக்கு பின்பு ஜென்ம கேதுவால் சிலருக்கு அலைச்சலும். ராகு வால் வெளிநாடு பயணமும் கிடைக்கும். அரசியலிலும் உத்தியோகத்திலும் வளம் பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
இந்த நாட்களில் வெளியில் செல்வது அவசியம் என்றாலும் கூட பிறரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபவதை தவிர்ப்பது நல்லது. பணத்தை கையாளும் போது சற்று கவனமாக இருக்கவும்.
 
நட்சத்திர பலன்கள்:
 
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள்:
 
சொத்து சம்மந்தமான சில பிரச்சனைக்கு தீர்வுகள் உண்டாகும். கலைதுறையினர் வாய்ப்புகளை பெறுவீர்கள். நியாயமான விடயங்களுக்கு உடன் இருந்து உதவி செய்வீர்கள்.
 
சுவாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
வெளிநாடுகள் செல்லும் முயற்சிகள் வெற்றியைத் தரும். தடைபட்ட காரியம் நன்மையாக முடியும். சிறிய முதலீடு லாபகரமாக அமையும். ஆதரவற்றவருக்கு உதவி செய்வீர்கள்.
 
விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
காலத்திற்கு உகந்த தொழிலை செய்து வளம் பெறுவீர்கள். கருத்துகளுக்கு முக்கியத்துவம் தந்து தன்னை சார்ந்தவர்களுக்கு உதவிகளை செய்வீர்கள். ஆன்மீக பற்று நல்ல வளர்ச்சியை தரும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: பழுத்த வெண்மை, நீலம், ஆரஞ்சு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வட மேற்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட திகதிகள்: 3, 6, 8.
 
இந்தாண்டு முழுவதும் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மன், காளியம்மன் வழிபாட்டை ராகு காலத்தில் செய்து, விளக்கெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகல காரியம் வெற்றியையும், மன தைரியத்துடன் செயல்படும் பலத்தையும் பெறுவீர்கள்.