2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - ரிஷபம்

2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - ரிஷபம்

நிலையான உறுதி தன்மையுடன் செயல்பட்டுவரும் ரிசப ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்தும் லாபஸ்தானத்தில் அதிசாரம் பெற்று முதலில் சனீஸ்வரர் பாக்கிய ஸ்தானத்திலிலும் பிற்பகுதியில் தொழில் ஸ்தானத்திலும் அமர்வதும் சிறந்த பலன்களை பெற்று தரும். ஜென்ம ராகு மார்ச் மாதத்தில் விரைய ராகுவாகவும் களத்திர கேது சத்ருஸ்தானத்திலிலும் அமர்வது இன்னும் சிறந்த பலனை பெற்று தரும். எதையும் தடையின்றி செயல்படுத்துவீர்கள். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பகல் கனவுகள் மறையும். வெளிபடையான தன்மையால் உங்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வருமானத்திற்கு தகுந்த செலவுகளை செய்து கடனின்றி வளம் பெறுவீர்கள். பாதியில் நின்ற காரியம் நடைபெற துவங்கும். தொழிலில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். குரு பார்க்குமிடம் சிறப்பான பலனை தரும். நீங்கள் ஆசைப்பட்ட வரன் விரைவில் அமையும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
குறித்த விடயங்களை கையாளும்போது கவனமுடன் செயல்படவும். பண புழக்கத்தில் உயர்மதிப்புள்ள பணத்தை நிதானமாக பலமுறை சரிபார்த்துக் கொள்ளவும். மன சஞ்சலம் உண்டாகும்.
 
நட்சத்திர பலன்கள்:
 
கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
குறுக்கு வழியில் லாபம் வரும் தொழிலை விடுத்து, நேர்மையான வழியை கையாளுவது நல்லது. பொது விடயத்தில் நல்ல பலனை பெறுவீர்கள். செய்யும் தொழிலை மதித்து நடப்பீர்கள்.
 
ரோகிணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். அனைவரின் வளர்ச்சிக்கு உதவிகளை செய்வீர்கள். செய்யும் தொழிலை வளம் பெற செய்து பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள்.
 
மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள்:
 
குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். புதிய திட்டங்களுக்கு வழி கிடைக்கும். யோசிக்காத விடயத்தை கூட விரைந்து முடித்து விடுவீர்கள். சோதனையை கூட சாதனையாக்குவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: பழுத்த வெண்மை, மஞ்சள், நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட திகதிகள்: 6, 8, 3.
 
இந்தாண்டு முழுவதும் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை, காளியம்மனுக்கு வேப்பெண்ணெய் தீபமும். குலதெய்வ வழிபாடுகளும் செய்வதன் மூலம் உங்களின் எதிர்கால திட்டம் வெற்றியையும். பொருளாதார வளமும் பெற செய்யும்.