2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - மிதுனம்

2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - மிதுனம்

விரும்பிய பணிகளை தெரிவு செய்து செயல்படுத்தும் மிதுன ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து ராசியை பார்ப்பதும் தனஸ்தானத்தை சனி பார்வை இடுவதும் உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மாற்றத்திற்கு காரணமாக அமையும். அட்டம சனியால் வரும் துன்பம் குரு பார்வையால் நிவர்த்தியாகும். பல சோதனைகள், மன அழுத்தம், குடும்பத்தில் குழப்பம் போன்ற சூழ்நிலைகளால் பல்வேறு வருத்தத்தால் இருந்த நிலை குரு பார்வையால் நிவர்த்தியாகும். விரையத்தில் இருந்து வந்த ராகு மார்ச் மாத்திலிருந்து லாபஸ்தானத்திற்கு செல்வது உங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எதையும் எளிதில் புரிந்து கொள்வது, புரிந்து செயல்படுவது மனதில் பட்ட விடயங்களை மேன்மைபடுத்திக் கொள்தல் உங்களின் வளர்ச்சிக்கு வழி கிடைக்கும். பொறுப்பற்ற புத்திரர்களின் சிலர் பணிக்கு செல்வதும், குடும்ப சூழ்நிலையை உணர்ந்து நடந்து கொள்வதும் பயனுள்ளபடி நடக்கும். சரியான நேரத்தில் சரியான பாதையை தெரிவு செய்து உங்களின் முக்கிய காரியங்களை செயல்படுத்துவீர்கள். பணிபுரியுமிடத்தில் உங்களுக்கென்று வரன்முறைபடுத்திக் கொள்வீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
எதிரிகள் என்று தெரிந்து அவர்களிடம் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகும். பிறருக்கு பணம் வாங்கி தருவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
 
நட்சத்திர பலன்கள்:
 
மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள்:
 
விளையாட்டுத் துறையிலும், கலைதுறையிலும் உங்களின் செல்வாக்கு உயரும் செய்யும் தொழிலில் பொருளாதார வளர்ச்சியைப் பெறுவீர்கள். எதையும் முன் கூட்டியே யோசித்து செயல்படுவீர்கள்.
 
திருவாதிரை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
திறமைசாலியாக இருந்தாலும் சில நேரம் எதையும் கவனமுடன் செயல்படுவது நல்லது, பாதிக்கப்பட்ட பல காரியங்களில் முன்னேற்றம் கண்டு வளம் பெறுவீர்கள். சரியான வளர்ச்சிக்கு வழி கிடைக்கும்.
 
புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
புதல்வர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியைத் தரும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். புனிதமான பல காரியங்களை செய்து மேன்மேலும் வளம் பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென் கிழக்கு, வட மேற்கு.
 
அதிர்ஷ்ட திகதிகள்: 3, 5, 8.
 
இந்தாண்டு முழுவதும் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து சுப்ரமணியருக்கு இலுப்பெண்ணெய் தீபமிட்டு வேலுக்கு பால் அபிசேகம் செய்து வழிபட, பொருளாதார வளர்ச்சி இருக்கும்.