2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - மேஷம்

2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - மேஷம்

விறுவிறுப்பாக எதையும் செயல்படதுடிக்கும் மேச ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் சாதனை ஆண்டாக இருக்கும். காலத்தையும் நேரத்தையும் சரியாக செய்து கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள். குரு லாபஸ்தானத்திலும், தொழில் ஸ்தானதிபதி  தொழில் ஸ்தானத்திலும், பிற்பகுதியில் லாபாதிபதி லாபஸ்தானத்திலும் வருவது மிகவும் சிறந்த பலனை பெறுவீர்கள். எதிர்பார்த்து இருந்த காலம் போய், எதிரில் வந்த உதவிகளை பெறுவீர்கள். மார்ச் மாதத்தில் ஜென்ம ராகு வரும்போது உங்களின் செயல் மேலும் துரிதப்படும் இருந்தாலும் ஞாபக மறதியும், சில விடயங்கள் விட்டு போவதும் உண்டாகும். குடும்ப பொறுப்பு உங்களுக்கு பல சாதனைகளை பெற்றுத் தரும். எதற்கும் அஞ்சாத மனோநிலையை பெறுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் நீங்கள் சாதனையாளராகவும் பொறுப்புடனும் நடந்து கொள்வீர்கள். யாரையும் நம்பி இருக்கமாட்டீர்கள். பொருளாதாரம் தன்னிறைவை தரும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
செயல்பாடுகளில் சற்று கவனமுடன் செயல்படுவதும். அதிக அலைச்சலையும் தவிர்ப்பதும் நல்லது பண புழக்கத்தின் போது சிதைந்த நோட்டுகள் வராமல் கவனமுடன் கையாளுவது நல்லது.
 
நட்சத்திர பலன்கள்:
 
அசுபதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
எந்த செயலையும் ஆராய்ந்து அறிவாற்றலுடன் செய்வீர்கள். பொறுப்புடன் செயல்பட்டு பாராட்டு தலையும். வரவேற்பையும் பெறுவீர்கள். திருமண காரியம் கைகூடும்.
 
பரணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சாதாரண விடயத்தைக்கூட கவனமுடன் செய்வதும் தவறு நடக்காமலும் பார்த்துக் கொள்வீர்கள். எதற்கும் துணிவுடன் செயல்படுவதும், பொருளாதார வளர்ச்சியும் பெறுவீர்கள்.
 
கார்த்திகை 1ம் பாதம்:
 
அரசியலிலும், பொது செயல்பாடுகளிலும் தனித்தன்மை கொண்டு விளங்குவீர்கள். விளையாட்டு துறை, விவசாயம் சிறப்பாக செய்து முன்னேற்றமும் பொருள் வளமும் பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மஞ்சள், நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட திகதிகள்: 1, 2, 9.
 
இந்தாண்டு முழுவதும் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய், வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு விளக்கெண்ணெய் தீபமிட்டும், மஞ்சள் குங்குமம், பழம் வைத்து வேண்டிக் கொள்ள, உங்களின் சகல காரியமும் அனுகூலமாக அமையும்.