2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - மீனம்

2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - மீனம்

அனைவரிடமும் அன்பை பரிமாறிக் கொள்ளும் மீன ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு விரைய குருவாக இருந்து ஏப்ரலில் உங்களின் ராசிநாதன், குரு ராசியில் அமர்வதும் சனி ஆரம்பத்தில் லாபஸ்தானத்தில் அமர்ந்து பொருளாதார வளம் பெற செய்து பின்பு ஜுலையில் விரைய சனியாகி அலைச்சலையும் உண்டு பண்ணுவார். மார்ச் மாதத்தில் ராகு தனஸ்தானத்திலும், கேது அட்டம ஸ்தானத்திலும் அமர்ந்து திருமணத்தடை உருவாக்குவார்கள். எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்படும் உங்களின் வளர்ச்சிக்கு நல்ல வளத்தை பெற்று தரும். உங்களின் உறவினர்களின் பெயரில் சொத்து வாங்குதல், தங்களிடம் இருக்கும் சொத்துகளை பிற உறவினர் பெயரில் மாற்றம் செய்வதன் மூலம் கெடுபலன்களை குறைத்து கொள்ளலாம். ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு இந்த கெடுபலன் எதுவும் செய்யாது என்றாலும், தொடர்ந்து தெய்வ வழிபாடு மூலம் எதையும் ஜெயிக்க முடியும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது நண்பர்களின் ஆலோசனையை பெறுவதும். தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் பல கோணத்தில் யோசித்து செயல்படுவதும் வெற்றியைத் தரும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
சந்திரன் அட்டமத்தில் இருக்கும் காலத்தில் எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது நல்லது. பண புழக்கம் இருக்கும் போது நிதானமாக இருப்பது இன்னும் சிறப்பு, புதிய முயற்சியை தவிர்க்கவும்.

நட்சத்திர பலன்கள்:

பூரட்டாதி 4 ம் பாதம்:
 
புத்திரர்களின் தொழில் சிறக்க உதவி செய்வீர்கள். முக்கிய பயணம் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய செயல் திட்டங்களுக்கு உதவிகள் கிடைக்கும் பண புழக்கம் இருக்கும்.
 
உத்திரட்டாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
உறுதி தன்மையுடன் செயல்படுவீர்கள். குறுகிய கால முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழிலில் நல்ல வளர்ச்சியை பெற்று பொருளாதார ஏற்றம் பெறுவீர்கள்.

ரேவதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
போட்டிகளை தவிர்த்து செயலில் ஈடுபடுவது நல்லது. காண வேண்டிய முக்கிய நிகழ்வுகளை தவிர்க்காமல் செயல்படுவீர்கள். தொழிலில் கவனமுடன் செயல்படுவீர்கள். உடல் நலனின் அக்கறை எடுப்பீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு, வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட திகதிகள்: 3, 7, 9.
 
இந்தாண்டு முழுவதும் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளிக் கிழமை நாக தேவதையை வணங்கி மஞ்சள், பால் வைத்து நெய் தீபமிட்டு வணங்கி வர உங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சனிக்கிழமை பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு வர அனைத்து காரியமும் ஜெயமாகும்.
 
கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
வாடிபட்டி R.ஆனந்தன்
செல் - 91-9789341554