2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - கும்பம்

2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - கும்பம்

தன்னை மதிப்பவர்களை மதித்து நடக்கும் கும்ப ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஜென்ம குரு பார்க்குமிடம் சிறப்பாக அமையும். அதிசாரமாக செல்லும் போது மறைவுஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பது தொழிலிலும் கடன் வழக்குகளில் நன்மையும் உண்டாகும். உடல் நலனின் அக்கறை கொள்ள வேண்டிவரும் விரைய சனி ஜென்மச் சனியாக வரும்போது குருவுடன் இணைவது சிலருக்கு மனவலிமையும் தொடர்ந்து காரிய அனுகூலமும் உண்டாகும். உங்களின் கூட்டுதொழிலில் சிலருக்கு அதிக லாபமும் சிலருக்கு முதல் மட்டும் வரும். நோயிலிருந்து விரைவில் விடுபடுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். குலதெய்வ வழிபாடுகளும். திருமண வாய்ப்பையும் பெறுவீர்கள். சிலருக்கு சனியுடன் சுக்கிரன் சேரும் காலம் சுக்கிரன் பார்வை பெறும் காலம் அதிர்ஷ்டமாக அமையும். சுற்றுலா சென்று வருதல். மகிழ்ச்சியான சிறு விழாகளில் கலந்து கொள்ளுதல். அரசியலில் வெற்றியையும் செல்வாக்கும் பெறுதல் அமையும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள்:
 
எதிலும் அவசரமின்றி நிதானமாக செயல்படுவது நல்லது. எழுத்துகளில் சிலருக்கு தவறு வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணத்தை கையாளும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது.
 
நட்சத்திர பலன்கள்:

அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள்:
 
மருத்துவ துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும். சரியான முடிவை எடுத்து சிலர் காரியத்தை சாதித்து கொள்வீர்கள். முக்கிய முடிவுகள் உங்களின் வாழ்க்கை செழிப்படைய செய்யும்.
 
சதயம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சிறந்து விளங்கிட எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும். வெளிநாடு செல்வதும். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு பயனுள்ள வளர்ச்சியை பெற்றுத் தரும்.
 
பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
குழந்தை பாக்கியம் கிட்டும் பதவி உயர்வும், சம்பள வாய்ப்பும் சிலருக்கு கிடைக்க பெறுவீர்கள். உடல் நலனின் கவனம் செலுத்தி, உங்களின் வருத்தத்தை குறைத்து கொள்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், பச்சை, வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
 
அதிர்ஷ்ட திகதிகள்: 3, 6, 8.

இந்தாண்டு முழுவதும் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமை சுப்ரமணியரையும், திங்கள்கிழமை சிவனையும் தொடர்ந்து வணங்கி உங்களின் அன்றாட பிரச்சனை சொல்லி வேண்டிக்கொள்ள தடைகள் நீங்கி, சுபிட்சம் பெறுவீர்கள்.