2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - கடகம்

2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - கடகம்

வெளிபடையான செயல்பாடுகள் மூலம் செயல்படும் கடக ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பார்க்குமிடம் சிறப்பான பலன்களை தருவதுடன் கண்டக சனி ஆரம்பத்திலும், பிற்பகுதியில் அட்டம சனியும் வருவது உங்களின் வளர்ச்சிக்கு சிறுதடையாக இருந்தாலும், குரு பார்வையால் எல்லாம் சுபமாக அமையும். எதிர்ப்புகளை எப்படி விடுவித்துக் கொள்வது என்று சரியாக யோசித்து செயல்படுவீர்கள் பல காலம் காரணமின்றி கஷ்டப்பட்ட நிலைமாறி நன்மைகள் உண்டாகும் எதற்கும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் சிறப்பாக இருந்து வந்த உங்களுக்கு, சில காலமாக இருந்த தொய்வு நிலை மறைந்து, மீண்டும் உங்களின் செல்வாக்கு உயரும். கொள்கை பிடிப்புடனும், ஆணித்தரமான சூழ்நிலையும் உண்டாகும். சனியால் வந்த சில துன்பம் உங்களின் இடைவிடாத உழைப்பால் மறையும். சரியான வசதி வாய்ப்பை கலைதுறையினர் பெற்று முன்னேறுவீர்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு தொழிலில் முன்னேற்றமும் பொருளாதார மேன்மையும் பெற்று வளமான வாழ்வை பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
சந்திராஷ்டம நாட்களில் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும் வரும். மொத்தமாக பணபுழக்கம் இருக்கும் போது கவனமுடனும், அடுத்தவரிடம் பொறுப்பை ஒப்படைத்து மனஅழுத்தமும் இல்லா மல் கவனமுடன் இருப்பது நல்லது.
 
நட்சத்திர பலன்கள்:
 
புனர்பூசம் 4ம் பாதம்:
 
சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பழைய நண்பர்களின் தொடர்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
 
பூசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
எதை நினைத்தீர்களோ அதன் அடையும் வரை விடாமுயற்சி செய்து முடிப்பீர்கள். உங்களின் செல்வாக்கு மக்கள் மத்தியில் சிறப்பாக இருக்கும். உங்களின் உரிமையை விட்டு கொடுக்காமல் இருப்பீர்கள்.
 
ஆயில்யம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
மருத்துவர்கள், ஆசிரியர் பணி, கணணி பணியில் சிறந்து விளங்குவீர்கள். உங்களின் கடமையில் சிறிதும் பாதிக்காமலும் துரிதமாகவும் செயல்பட்டு வளமான வாழ்வை பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வட மேற்கு, கிழக்கு
 
அதிர்ஷ்ட திகதிகள்: 2, 3, 9.

இந்தாண்டு முழுவதும் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
திங்கள், சனிகிழமைகளில் ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபம் மூன்று ஏற்றி மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் வைத்து வழிபட, உங்கள் மதிப்பும், செய்யும் தொழிலில் வளமும், பொருளாதார உயர்வும் பெறுவீர்கள்.