2022 ஆங்கில புத்தாண்டு பொதுப் பலன்கள்

2022 ஆங்கில புத்தாண்டு பொதுப் பலன்கள்

பொதுப் பலன்கள்

அனைத்து வாசகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
 
இந்த ஆண்டு துவங்கும் போது கன்னிகா லக்கனத்தில் சந்திரன் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் முதல் காலிலும், சூரியன் தனுசு ராசியிலும், சனி மகரத்தில் ஆட்சி பெற்றும், புதனும் சுக்கிரனும் மகரத்தில் வக்கிரம் பெற்றும், குரு கும்ப ராசியிலும், ராகு ரிசபத்திலும், கேது விருச்சிகத்தில் ராசிநாதன் செவ்வாயுடனும் சேர்ந்திருக்கும் பலன்கள் அறிவோம்.
 
இந்த ஆண்டு துவங்கும் போது கால சர்ப்ப தோசத்தில் கிரகங்கள் அமைவதும், புத்திகாரகன் புதன், களத்திர காரகன் சுக்கிரன் இருவரும் வக்கிரம் பெறுவது காரிய தடைகளையும், சிலருக்கு அதிர்ஷ்டத்தையும் தரும். மருத்துவர்களுக்கு அதிகமான நோயாளிகள் வந்தாலும், நோய் பலருக்கு விரைவில் குணமாகும். பல மாதம் கிடப்பில் கிடந்த பல விடயங்களுக்கு தீர்வும். மறைமுகமாக இருந்த காரியங்கள் வெளிபடுத்தபடும். பாதிப்பிலிருந்து பலர் விடுபடுவீர்கள். தனுசு சூரியன் அரசாங்க காரியங்களில் மக்களுக்கு அனுகூலமான சூழ்நிலையை தருவார்கள்.
 
இந்த ஆண்டு முதலில் ராகு / கேது பெயர்ச்சி (பங்குனியில்) மார்ச் மாதத்தில் வருவது பல ராசிகளுக்கு அற்புதமான பலன்களை தரும். விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்துகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை பெறுவார்கள். தங்கம் விலை ஏற்றம், பெற்றோல், டீசல் விலை ஏற்றும் பெறும். மளிகை பொருட்கள் விலை குறையும் - எண்ணெய் வகைகளுக்கு தட்டுபாடும், விலை உயர்வும் உண் டாகும். 
 
ஆண்டின் மத்தியில் தொழிலாளர்கள் மக்கள் போராட்டம் மூலம் சில விடயங்களுக்கு தீர்வு பெறுவார்கள். சனி பெயர்ச்சியாகும் நிலையில் நல்ல மாற்றத்தையும். வளரும் நாடுகளுக்கு வியாபார விருத்தியும். நலிந்த நாடுகளுக்கு பொருளாதார உதவியும் கிடைக்கும். பலநாடுகளில் வர்த்தக ஒப்பந்தம் மூலம் பொருளாதாரத்தை பெருக்கி கொண்டு வளம் பெறுவார்கள். உஷ்ண சம்மந்தமான நோய்கள் வந்து பாதிப்பை தரும். சட்டத்திற்கு முன் குற்றவாளிகள் தண்டிக்கும் சூழ்நிலை உருவாகும். 
 
ஆதரவற்றவர்களுக்கு நல்லாதரவுகள் கிடைக்கும். அடிக்கடி வறண்ட வான்நிலை அதிகம் இருக்கும். சில நாடுகளில் குடிநீர் பற்றாக்குறை உண்டாகும். ஜவுளி நூல் விலை ஏற்றத்தால் ஜவுளி தொழிலில் நிறைய சவால்களை சந்திக்க வேண்டி வரும். இளைஞர்களுக்கு பல நாடுகளில் புதிய வேலை வாய்ப்பு கட்டுபடுத்தப்படும். காப்பீடு திட்டம் கடுமையாக்கப்படும்.