2022 - 2023 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

சோதனைகளை கூட சாதனைகளாக்கி கொள்ளும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசியில் அமர்ந்த கேது விரைய ஸ்தானத்திற்கும், களத்திரஸ்தானத்தில் இருந்த ராகு சத்ரு ஸ்தானத்திற்கும் வரும் 21.03.2022 முதல் வர இருக்கிறார்கள். 
 
இனிமேல் சத்ரு ஸ்தானத்தில் ராகு அமர்வது உங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும்படியும் செயல்படும் படியும் அமையும். தடைகளாக இருந்த அனைத்து காரியங்களும் இனி செயல்பட துவங்கும். எதிர்ப்புகள் மறையும். நினைத்த காரியம் இனி கைகூடும். தேவையற்ற அர்த்தமற்ற பேச்சுகளை குறைத்து கொண்டு, செயல்பட துவங்குவீர்கள். நிலைமையை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். வெளிநாடு செல்ல எடுத்த முயற்சி கை மேல் பலன் தரும். பொருளாதாரத்தில் மேன்மை பெறுவீர்கள். அரசியலிலும், ஆன்மீகத்திலும் நாட்டம் உண்டாகும். உங்களை பற்றி சில ரகசியம் வெளியில் தெரிய வரும்.
 
இனி உங்களின் ராசிக்கு சத்ரு ஸ்தானமான ஆறாமிடத்தில் ராகு அமர்வது மறைமுகமான எதிரிகளின் செயல்பாடுகள் முடங்கும். காரியத்தில் கவனம் செலுத்தி உங்களின் வேலை முடித்துக்கொள்வீர்கள். சூரியனின் நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களுக்கு இருந்த தடை நீங்கும். உங்களை குறை கூறியவர்கள். உங்களுடன் இணைவார்கள். சுக்கிரனின் நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் காலத்தை நினைத்து எப்படி செயல்படுவது என்று நினைத்து தயங்க கொண்டிருந்த உங்களுக்கு எதிர்கொண்டு செயல்படும் நிலைக்கு வருவீர்கள். புதிய நண்பர்கள் சேர்க்கை உங்களுக்கு ஊக்கம் தரும். கேது நட்சத்திரத்தில் அமரும் காலம் வெளிநாட்டு தொடர்புகளும், அதன் மூலம் நன்மையும் உண்டாகும். சிலருக்கு உடல்நல குறைவுகளும் உண்டாகலாம். 
 
இனி கேது குரு நட்சத்திரத்தில் அமரும் காலம் பொருளாதார நிலைமேம்படும். வர வேண்டிய தொகை வசூலாகும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். ராகுவின் நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் காரிய தடைகள் விலகும். பொருளாதாரத்தில் வளர்ச்சியையும், திறமையும் வளர்த்துக் கொள்வீர்கள். தொழிற்சங்க பணியில் சிறப்பாக செயல்பட்டு, பாராட்டு பெறுவீர்கள். செவ்வாய் நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். சிலருக்கு நோய் அறிந்து விரைவில் குணம் அடைவீர்கள். எதற்கு தெய்வ வழிபாடு மூலம் நல்ல தீர்வையும், பலனையும் பெறுவீர்கள்.
 
பரிகாரம்: 
 
சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்வதும் செவ்வாய் கிழமை சுப்ரமணியர் வழிபாடு தொடர்ந்து செய்து வருவதும் விளக்கேற்றி வேண்டிகொள்வதன் மூலம் உங்களின் அனைத்து காரியமும் சிறப்பாக நடக்கும். பொருளாதார நிலை மேன்மை உண்டாகும்.

R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554