2022 - 2023 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

காலத்தை வென்று காரியம் சாதித்திடும் சிம்ம ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு இதுவரை தொழில் ஸ்தானத்தில் ராகு, சுக ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து தொழிலிலும் உடல் நலனிலும் சில நற்பலன்களையும், சிறு இடையூறுகளையும் செய்து வந்த நிலை மாறி, இனி வரும்  21.03.2022 முதல் உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும் முயற்சி ஸ்தானத்தில் கேதுவும் அமர்வதும் நினைத்தபடி எதையும் செயல்படுத்துவீர்கள்.

உங்களின் மனவலிமையால் காரிய அனுகூலம் பெறுவதும் அமையும். எந்த கிரகமாக இருந்தாலும் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்தால் கெடு பலன்களை தருவதில்லை. அதுபோல ராகு அமர்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்று தருவார். இதுவரை அடைய முடியாமல் தடை இருந்து வந்தால் பரிகாரம் மூலம் அதனை அடைவீர்கள். ராகு / கேது இருவருமே விடுதலை தர கூடிய கிரகம் என்பதால் ஒரு பிரச்சனைக்கு எது தீர்வு என்று அறியும் நிலை உருவாகும். கடந்த காலம் எப்படி இருந்தாலும் இந்த காலம் உங்களுக்கு சிறப்பாக அமையும்.
 
இனி ராகு பாக்கியஸ்தானத்தில் அதுவும் யோகாதிபதி வீட்டில் அமர்வதால், உங்களின் திறமை வெளியில் தெரிய ஆரம்பிக்கும். பனி போல எல்லாம் மறையும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். சூரியன் நட்சத்திரத்தில் ராகு அமரும். இரு மாத காலம் உங்களின் சொல்வாக்கும், செல்வாக்கும் உயரும். சுக்கிரனின் நட்சத்திரத்தில் ராகு இருக்கும் காலம் மனைவி அமைவது மனைவி மூலம் ஆதாயம் அடைவதும், கொடுத்த இடத்திலும், பல நாட்கள் நிலுவையிலிருந்த பணமும் வரும். சிறந்த நற்பலன்களும் கிடைக்கும். கேது நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் தொழிலிலும், அரசியலிலும், பொது வாழ்விலும் மேன்மையை அடைவீர்கள். 
 
இனி கேது உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் அமர்வது யோகத்தை அடையும். கீர்த்தி, செல்வாக்கு, உயர்ந்த நிலை பொருளாதார வளர்ச்சி என்றும் வளம் பெறும் வாய்ப்புகள் அமையும் கேது குரு நட்சத்திரத்தில் அமரும் காலம் பொருளாதாரத்திலும் ஆன்மீகத்திலும் வளம் பெறுவீர்கள். வெளிநாடு தொடர்புகள் உங்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொடுக்கும். ராகுவின் நட்சத்திரத்தில் கேது சென்ற இடமெல்லாமல் சிறப்பு புனித யாத்திரை சென்று வரும் போன்ற பாக்கியம் கிட்டும். செவ்வாய் நட்சத்திரத்தில் கேது அமரும் போது தொழிலிலும் சகல காரியமும் வெற்றியும் வளமும் பெற்று, மேன்மை அடைவீர்கள்.

பரிகாரம்: 
 
திங்கள் கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து மிளகு கலந்த அன்னம் வைத்து வெள்ளை நிற பூ வைத்து வணங்கிவர எதிர்காலமும், நிகழ் காலமும் சிறப்பாக அமையும். வேண்டியதை தடையின்றி பெறுவீர்கள்.

R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554