2022 - 2023 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

பொறுப்புடன் செயல்பாடுகளை செய்யும் ரிஷப ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு இதுவரை ராசியில் இருந்த ராகு விரையஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதும், களத்திர ஸ்தானத்திலிருந்து கேது சத்ரு ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாவதும் வரும் 21.03.2022 அன்று உங்களின் வாழ்வில் பொன்னான நாளாக அமையவிருப்பதும். மறைவு ஸ்தானத்தில் ராகு / கேது அமர்வது. நீங்கள் நினைத்தபடி காரியங்கள் வெற்றி பெறும் சூழல் உருவாகும்.
 
இதுவரை ராசியில் இருந்த மனசஞ்சலத்தையும், செயல்களில் பல தடைகளையும் தொழிலில் மந்த நிலையும் தந்து வந்த ராகு, இனி 12 ஆமிடத்தில் அமர்வது சிறந்த பலனை தரும். களத்திர ஸ்தானத்தில் கேது இதுவரை இருந்து கூட்டு தொழிலில் விரையம், பண இழப்புகள், தொழிலில் மந்த நிலை வெளிநாடு செல்ல முடியாமல் போன சூழல்.. ஆகியவை மாறும். இனி எல்லாம் சிறப்பாக அமையும்.
 
உங்களின் ராசிக்கு ராகு கார்த்திகை முதல் பாதத்தில் இருக்கும் இரண்டு மாத காலம் சிறு தடைகள் வந்தாலும் உங்களின் விடாமுயற்சியால் அரசு சார்ந்த விடயங்களை செயல்படுத்துவீர்கள். சுக்கிரன் நட்சத்திரத்தில் அமரும் போது வெளிநாடு யோகம், பயணம், வேலை, தொழில் அமையும். திருமண தடை நீங்கி, விரைவில் சிலருக்கு திருமணம் நடக்கும். அசுபதி நட்சத்திரத்தில் ராகு பயணப்படும் போது உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டிவரும். பொருளாதாரம் பல மடங்கு பெருகும். கணவன் - மனைவி உறவு பலப்படும். பிரிந்த உறவுகள் இணையும், ஆன்மீகத்தில் நம்பிக்கை உருவாகும். சிறந்த வளர்ச்சியை பெறுவீர்கள். 
 
இனி ஆறாமிடத்தில் கேது அமர்வது எதிரிகளின் தொல்லை தீரும். விசாக நட்சத்திரத்தில் கேது அமரும் போது பொருளாதாரத்தில் மேன்மையும் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். ராகு நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் போது கணவன் மனைவி உறவு பலப்படும். எதிர்பாராத மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டி வரும். அமைதியாக எதுவும் இல்லை என்றாலும், அர்த்தமில்லாத கவலை வந்து மனதில் சிறு வருத்தம் உண்டாகும். செவ்வாய் நட்சத்திரத்தில் கேது இருக்கும்போது போது வாழ்விலும் தொழிலிலும் சிறந்து விளங்குவீர்கள். எதையும் முன் கூட்டியே யோசித்து செயல்படுவதும், நிலையான முடிவும் எடுப்பீர்கள்.
 
பரிகாரம்:
 
செவ்வாய்கிழமை ராகு காலத்தில் மாரியம்மன் கோயிலில் விளக்கெண்ணெய் தீபமிட்டு மல்லிகை அல்லது வெள்ளை நிற பூ வைத்து வேண்டிவர தொழிலிலும், உத்தியோகத்திலும் மேன்மை அடைவீர்கள். பொருளாதார நிலை உயரும்.

R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554