2022 - 2023 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - கன்னி

தன்னை அறிந்து செயல்களை செய்து வரும் கன்னி ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு இதுவரை மூன்றாமிடத்தில் கேதுவும், பாக்கியஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்து சிறு நன்மையையும், உதவிகளை செய்து வந்தார்கள். இனி வரும் 21.03.2022 முதல் ராகு அட்டம ஸ்தானத்திலும்.கேது தனஸ்தானத்திலும் அமர்வதும் உங்களின் ராசியை குரு பார்ப்பது வரை எல்லா நலன்களும் தடையின்றி பெறுவீர்கள். குரு பார்க்காத காலம் நாகதோசத்தால் சில தடைகளை அடைவீர்கள். உங்களின் வளர்ச்சிக்கு ராகு / கேது தடையாக இருந்தாலும் குருவால் நன்மையே பெற முடியாமல் போனாலும், அதிலிருந்து விடுதலையை அடைவீர்கள். பேச்சை குறைத்து கொள்வீர்கள். சுறுசுறுப்பாக இருந்த நீங்கள், சோம்பலால் எதையும் தாமதமாக செய்வீர்கள். நல்ல காலம் வருமா? என்று இருந்தவர்கள் குறையை நீக்கிட தெய்வ வழிபாடு மூலம் தீர்வுகளை தேடி அதிலிருந்து விடுதலை பெறுவீர்கள். 
 
இனி ராகு அட்டமஸ்தானத்தில் இருப்பது உங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தாலும் உங்களுக்கு நல்லவர் யார்? கெட்டவர் யார் என்பதை உணர்த்தும் காலமாக அமையும். உங்களுடன் இருந்து உங்களுக்கு துரோகம் செய்தவர்களை நன்கு அடையாளம் கண்டு கொள்வீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு இருக்கும் போது அரசாங்க காரியம் தடைபடும் தேவையற்ற சச்சரவு வரும் கவனமுடன் இருப்பது நல்லது. சுக்கிரன் நட்சத்திரத்தில் ராகு அமரும் போது திருமண தடை, மனைவியிடம் கருத்து வேறுபாடு குடும்பத்தில் சண்டை போன்றவை வரலாம். பேச்சை குறைத்து கொள்வது நல்லது. கேது நட்சத்திரத்தில் ராகு இருக்கும் போது உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டிவரும் மருத்துவ செலவு வரும் தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் தீர்வு உண்டாகும். 
 
இனி கேது விசாக நட்சத்திரத்தில் இருக்கும் காலம் பணபுழக்கம் நன்றாக இருக்கும். தேவைகள் நிறைவாக இருக்கும். வாதத்தால் வென்று வருபவர்களுக்கு பின்னடைவு உண்டாகும். ராகு நட்சத்திரத்தில் கேது அமர்வது, இனி தெரியாத உடல் உபாதைகளால் சிரமமும், குழப்பமும் உண்டாகும். நெருக்கடிக்கு ஆளாக வேண்டிவரும் என்பதால் எச்சரிக்கையுடன் இருத்தல் நலம். தெய்வ வழிபாடு பலன் தரும். 
 
பரிகாரம்:
 
செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ராகு காலத்தில் தொடர்ந்து துர்க்கை, காளிக்கு நெய் தீபமும் சிவப்பு நிற பூ வைத்து கோதுமை பண்டம் வைத்து வழிபாடு செய்து வர உங்களின் அனைத்து தடைகளும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். தொழிலைத் தக்க வைத்துக் கொண்டு வளம் பெறுவீர்கள்.

R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554