2022 - 2023 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - கடகம்

எந்த முடிவையும் தனக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளும் கடக ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு இதுவரையிலும் லாபஸ்தானத்தில் இருந்த ராகு தொழில் ஸ்தானத்திலும், கேது பஞ்சம ஸ்தானத்திலும் அமர்ந்து பல சோதனைகளையும். சில நன்மைகளையும் செய்து வந்தார்கள். இது வரும் 21.03.2022 முதல் ராகு தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் மறைவு ஸ்தானத்தை பார்வை இடுவதும். 
 
கேது சுகஸ்தானத்தில் அமர்ந்து தன ஸ்தானத்தையும் பார்வை இடுவது இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு விடியலை பெற்று தரும். நல்ல காலம் என நினைத்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக அமையும். ராகு / கேது கேந்திர ஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் தடைப்பட்ட தொழிலில் வளர்ச்சியை பெறுவீர்கள். குறைந்தபட்ச முதலீடு கொண்ட தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள். கிடைத்ததை வைத்து வளம் பெறுவீர்கள். பொருளாதார மேன்மை உண்டாகும். ராகு செவ்வாய் வீட்டில் அமர்ந்து செவ்வாயின் குணத்தையும், கேது சுக்கிரன் வீட்டில் அமர்ந்து சுக்கிரனின் குணத்தையும் செய்வார்கள். இனி இதுவரை லாப ஸ்தானத்தில் இருந்த ராகு தொழில் ஸ்தானத்திற்கு செல்வது தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெறுவீர்கள். தானே வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்திலிருந்து வந்த சில குழப்பம் முடிவுக்கு வரும். வயதானவர்களின் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டிவரும். ராகு சூரியனின் நட்சத்திரத்தில் இருக்கும் காலம் அரசியலில் நல்ல பதவியை பெறுவீர்கள். உங்களின் முயற்சி நல்ல பலனை தரும். சுக்கிரன் நட்சத்திரத்தில் ராகு இருக்கும் காலம் உங்களின் தொழிலில் பொருளாதார வளர்ச்சி மேன்படும்.
 
கேது நட்சத்திரத்திலிருக்கும் காலம் இதுவரை வராமலிருந்து வந்து தடைபட்ட காரியங்கள் செயல்படவும். வரவும் வந்து சேரும். எடுத்த காரியம் நல்ல பலனை பெற்று தரும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். கேது உங்களின் சுகஸ்தானத்தில் அமருவது நன்மையும் தீமையும் கலந்துவரும். குருவின் நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் காலம் புதிய வாகனம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற வளம் பெறுவீர்கள். ராகு நட்சத்திரத்தில் இருக்கும் காலம் சிறுதடை வந்தாலும் குழப்பமின்றி செயல்படுவீர்கள். எதிர்கால திட்டத்தினை செயல்படுத்தும் வாய்ப்பு பெறுவீர்கள்.
 
பரிகாரம்:
 
வெள்ளி / செவ்வாய் கிழமைகளில் விநாயகருக்கு கதம்ப மாலை போட்டு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள உங்களின் அனைத்து காரியமும் சிறப்பாக அமையும் எதிலும் வெற்றியை பெறுவீர்கள். பொருளாதார வளம் கிடைக்கும்.
 
R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554