2021 - 2022 குரு பெயர்ச்சி சிறப்புப் பொதுப் பலன்கள்!

2021 - 2022 குரு பெயர்ச்சி சிறப்புப் பொதுப் பலன்கள்!

இந்த ஆண்டு குரு, சனியுடன் வக்ர கதியில் இணைந்து பின்பு வரும் 13.11.2021 முதல் மகர ராசியில் அமர்ந்த குரு, சனிக்கிழமை மாலை 06.21-க்கு கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிது.  பிறகு 13.04.2022 முதல் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி ஐந்து மாதம் அங்கு அமர்ந்து மீண்டும் கும்பத்திற்கு வக்கிரகதியில் வந்து தங்கும் போது மீண்டும் சனியுடன் இணைகிறார். 15.11.2022 முதல் மீண்டும் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

இந்த குரு பெயர்ச்சி, கடந்த ஆண்டு போல தங்கம் விலையில் கடும் ஏற்றம் உண் டாகும். பங்கு சந்தையில் ஏற்றம் இறக்கம் உண்டாக்கும். 

கும்ப குருவானவர் கால புருஷ தத்துவபடி லாபஸ்தானத்தில் குரு இருப்பதால், தங்க நகை தொழில் செய்து வருபவர்களுக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும். உலக நாடுகளின் முதலீடு தங்கத்தில் சேமிப்பதால் விலை ஏற்றத்திலேயே இருந்துவிடும்.

சமையல் பொருள் மஞ்சள், வெந்தயம் போன்ற பொருட்களுக்கு திடீர் விலை ஏற்றம் உண்டாகும். வங்கிகளுக்கு கடன் வழங்குவதில் புதிய அணுகுமுறை சட்டங்கள் வந்து செயல்படுத்த வேண்டிவரும். 

வங்கி ஊழியர்களின் போராட்டம் தொடரும். பட்டு நூல் விலை ஏற்றம் உண்டாகும். 13.04.2022 முதல் தங்கம் விலையில் சற்று பின்னடைவு உண்டாகும். எதிர்பாராத பங்கு மார்க்கெட் சரிவு உண்டாகும்.

அனைத்து பொருட்களுக்கு தடை மற்றும் புதிய வரிகள் போட அரசு முயற்சி செய்யும். விலை ஏற்றத் தாலும், தொழில் முதலீடுகளுக்கு தட்டுபாடுகளாலும் மக்கள் பெரிதும் சிரமம் கொள்வார்கள். 

குரு வக்கிரகதியில் இருக்கும்போது மக்களின் குறைகள் தீர்க்க வழி கிடைக்கும். புதிய நோய்களுக்கான தடுப்பூசிகள் தடையின்றி கிடைத்து நோய் பரவாமல் தடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

ராகு / கேது பெயர்ச்சிக்கு பின்பு வெளிநாடு செல்லும் வசதி விரிவுபடுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு படிப்படியாக வர வழி கிடைக்கும். மருத்துவ உபகரணங்கள் கடும் விலை ஏற்றத்தால் தட்டுப்பாடுகள் வரும். 

இந்த குரு பெயர்ச்சியில் பெரும்பாலும் நன்மை தீமை இரண்டும் கலந்தே வரும். இறை வழிபாடு மூலம் மக்கள் தங்களுக்கு வரும் கஷ்டங்களை போக்கி கொள்ள வழி கிடைக்கும்.