2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தனக்கென்று ஒரு பாதை தெரிவு செய்து செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
குரு பெயர்ச்சியில் உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்தில் குரு அமர்ந்து அட்டம ஸ்தானத்தையும், விரையஸ்தனாத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பதால் செய்யும் தொழிலில் எத்தனை சிரமம் வந்தாலும் அதனை வெல்லும் வல்லமையை பெறுவீர்கள். உங்களைப் பற்றிய அவதூறு செய்திகளை பரப்பி குற்றம் சொன்னவர்களை மன்னிப்பு கேட்கும் அளவுக்கு உங்களுக்கு உதவி செய்வார். தொழிலில் லாபம் வருகிறதோ இல்லையோ நஷ்டம் வராமல் பார்த்துக் கொள்வார். உங்களின் ராசிக்கு தன, பூர்வ புண்ணியஸ்தானாதிபதியான குரு உங்களுக்கு எப்பொழுதும் நற்பலன் களையே பெற்று தருவார்.
 
நல்ல நண்பர்களின் சேர்க்கையால் உங்களின் வாழ்வை வளம் பெறச் செய்வார். கட்டுமான துறையிலும் நீர் சம்மந்தமான தொழிலிலும் சிறப்பான முன்னேற்றம் பெற நல்ல வாய்ப்புகள் வந்து அமையும். மின்சாரம் சம்மந்தமாக பணிகளில் நல்ல வருமானம் பெறு வீர்கள். அரசியல், தொழிற்சங்க அனு பவத்தால் பல நன்மைகளை பிறருக்கு செய்து தருவீர்கள். வேற் றுமை உணர்வுகளை மறந்து, அன்பை வெளிபடுத்தி வரவேற்பு பெறுவீர்கள். 

13.04.2022 முதல் குரு அதிசாரமாக வருவது, உங்களின் ராசிக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். உடல் ஆரோக்கிய மனவலிமை சிறப்பாக அமையும். உங்களின் யோகாதிபதி வீடும், குரு உச்சம் பெறும் வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு அனைத்திலும் வெற்றிக் கிட்டும்  உங்களின் லாப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். ராகு / கேது பெயர்ச்சிக்கு பின், நல்ல பலன்களை பெறுவதால், குரு பெயர்ச்சியால் தீமைகளை காட்டிலும் நன்மையே அதிகம். தொடர்ந்து முன்னேற்ற பாதையில், பயணம் செய்வது உங்களுக்கு மேலும் நற்பலனை பெற்று தரும்.உறவுகளின் இருந்த விரிசல் மறையும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் காலை 06 - 07 மணிக்குள் நவகிரக குருவுக்கு மிளகு கலந்த அன்னம் வைத்து ஒரு நெய் தீபமிட்டு வணங்கி உங்களின் வேண்டுதலை சொல்லி வர உங்களின் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக அமையும்.