2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - துலாம்

வாழ்க்கை வாழ்வதற்கே என நினைத்து செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!

வரும் 13.11.2021 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து, உங்களின் ராசியையும், பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வையிடுவதால் சிறப்பான நல்ல பலன்களை பெறுவீர்கள்.  உடல் நலனில் கவனம் செலுத்தி, உடலை பாதுகாத்து கொண்டும் மருத்துவம் எடுத்தும் பாதிப்பு வராமல் பார்த்து கொள்வீர்கள். மனவலிமையும், தைரியமும் உங்களின் லட்சிய கனவாக செயல்படுவீர்கள்.

உங்களின் தொழிலிலும், உத்தியோகத் திலும் வளர்ச்சியையும். புதிய பதவிகள், பதவி உயர்வு பெறும் வாய்ப்பையும் பெறுவீர்கள். கால மாற்றத்திற்கு தகுந்த படி உங்களை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். சாதாரண விடயத்தை கூட முழு கவனம் செலுத்தி வளம் பெற செய்வீர்கள். தீர்த்த யாத்திரை செல்லும் வாய்ப்பை சிலர் பெறுவீர்கள். திருமணம் புத்திர பாக்கியம் கிடைக்கும் சூழ்நிலையும் அமையும். சொந்த வீடு, வாகனம் வாங்க தேவையான பொருள் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உங்களின் லாபஸ்தானத் தையும், பாதக ஸ்தானத்தையும் குரு பார்ப்பதும் உங்களுக்கு கெடுபலன்கள் வராமல் பார்த்து கொண்டும், தொழிலும், உத்தியோகத்திலும் பொருளாதார வளர்ச்சியையும் பெற்று வளமாக வாழ்வீர்கள். 

வரும் 13.04.2022 முதல் குரு அதிசாரம் பெறுவதால், உங்களின் தொழில் ஸ்தானத்தையும், தன ஸ்தானத்தையும் பார்ப்பதால் நல்ல பொருளாதார நன்மையும் தொழிலில் புதிய யுக்தியை கையாண்டு மேம்படுத்தி கொள்ளும் சந்தர்ப்பமும் அமையும். உங்களின் விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் சகல காரியமும் அனுகூலமாகவும் நஷ்டமில்லாத வியாபாரத்தை யும் பெறுவீர்கள். தங்க நகைகள் வாங்குவதும், நகைகளை புதுப்பித்துக் கொள்ளுதல் போன்ற வளர்ச்சியை பெறுவீர்கள். பின் குரு வக்ரம் பெறும் போது, தெய்வ வழிபாடுகள் மூலம் பிரச்சனைகளை சரிசெய்து விடுவீர்கள்.

பரிகாரம்:

திங்கள், வியாழக்கிழமைகளில் நவகிரக குரு தரிசனம் செய்து முல்லை பூ (வெண் நிற பூ) மாலை போட்டு, ஒரு நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ளலாம் சிறப்பாகவும், தெளிவாகவும் செயல் அமைந்து பொருளாதாரத்தில் நன்மை உண்டாகும்.