2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

காலத்தையும் வென்று சாதித்து காட்டும் சிம்ம ராசி வாசகர்களே!

 
வரும் குரு பெயர்ச்சி, உங்களின் ராசிக்கு 13.11.2021 முதல் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து, உங்களின் லாபஸ்தானத்தையும் ராசியையும், மூன்றாமிடத்தையும் பார்வை யிடுகிறது. குரு அதிசார காலத்தில் உங்களின் ராசிக்கு நல்ல பலன்களை கொடுக்கும். அதேப்போல இந்த காலமும் நல்ல பலனை பெறுவீர்கள். எதையும் திட்டமிட்டு, நிலையை உணர்ந்து செயல்படுவதுடன் உங்களுக்கு பக்கபலமாக நண்பர்கள் அமைவதும் என்றும் சிறப்பாக இருக்கும்.

உங்களின் ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் கட்டுமான தொழிலிலும், கூட்டு முயற்சியிலும் நன்மை அடை வீர்கள். மனவலிமை, செயல்திறன் வள மான வாழ்வு, உடல் ஆரோக்கியம் போன்ற பலன்களையும் பெறுவீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்தி காட்டுவீர்கள். சுமையாக எதையும் நினைக்காமல் அனுபவமாக எடுத்து செயல்படுத்தி காட்டுவீர்கள். வேற்றுமையை நினைக்காமல் எல்லோரிடமும் பூரண அன்பு செலுத்துவீர்கள். மருத்துவர்களுக்கு நல்ல காலமாக அமையும். கலைதுறையினர் வளர்ச்சி மிக சிறப்பாக அமையும்.

வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் செய்து வெற்றியை பெறுவீர்கள். 13.04.2022 முதல் ஐந்து மாத காலம் அதிசார குருவாக அமர்ந்து அதுவும் உங்களின் ராசிக்கு நல்ல பலனை பெற்று தருவார். உங்களின் விரையஸ்தானத்தையும், தனஸ்தானத் தையும், சுகஸ்தானத்தையும் பார்ப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள்.

காலத்தின் சூழ்நிலைக்கு தகுந்தபடி உங்களை மாற்றிக் கொண்டு செயல்படுவதன் மூலம் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். வக்கிர குருவாக அமரும் போது சிலருக்கு தொழிலில் மாற்றமும,் இடமாற்றமும் அமையும். உறவுகளில் சிலருக்கு திருமணத்திற்கு உதவி செய்து அவர்களி டம் நற்பெயரை பெறுவீர்கள். கடந்த காலத்தைவிட சிறப்பாக வளம் பெற்று விளங்குவீர்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமை சிறந்த குருமார்களை சந்தித்து ஆசி பெற்று, நவகிரக குருவுக்கு நெய் தீபமிட்டு தொடர்ந்து வழிபட்டு வர உங்களின் அனைத்து காரியமும் வெற்றியை பெறும்.