2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

சுதந்திரமாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென நினைக்கும் ரிஷப ராசி வாசகர்களே!

வரும் குரு பெயர்ச்சி உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து உங்களின் தன ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும். சத்ரு ஸ்தானத்தையும் குரு பார்வை இடுவது உங்களின் சகல பொருளாதார வளத்திற்கும் நல்ல பலனை பெற்றுத் தரும். எதையும் முன் கூட்டியே யோசித்து செயல்படும் நீங்கள் கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கொள்வீர்கள்.

பாதியில் நின்ற காரியம் செயல்பட துவங்கும். எதிலும் வளர்ச்சியை எட்டி பிடிக் கும் வாய்ப்பை பெறுவீர்கள். உங்களின் தனஸ்தானத்தை பார்க்கும் காலம் தேவைகளுக்கு தகுந்த பொருளா தார பலத்தை பெறுவீர்கள். குறித்த காலத்தில் நீங்கள் நினைத்த இலக்கை அடைய உதவிகள் கிடைக்கும். உங்களின் சுகஸ்தானத்தை குரு பார்ப் பதால் வீடு கட்டும் திட்டம் விரைவில் நிறைவேறும். சிலருக்கு வீடு பராமரிப்பு செய்து புதுப்பித்து கொள்வதும், நவீன முறையில் வடிவமைத்து கொள்ளும்படியும் அமையும்.

உங்களின் சத்ருஸ்தானமான ஆறாமிடத்தை குரு பார்வை பெறுவது கடன் பெற வங்கி மூலம் வாய்ப்புகளை பெற்று அதிக வட்டி சுமையை குறைத்து கொள்ளும் நிலை உருவாகும். எதிரியால் இருந்து வந்த சில சங்கடங்கள் மறையும். பொறுப்புகள் அதிகரித்து அதில் முழு கவனம் செலுத்துவீர்கள். 

13.04.2022 அதிசாரமாக லாபஸ்தானத்தில் குரு அமரும் போது உங்களின் வாழ்க்கை செழிப்பாக அமையும் தொட்ட காரியம் கைகூடும். பிரச்சனை களை எதிர்கொண்டு விரை வில் தீர்த்து கொள்வீர்கள். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஐந்து மாத காலம் சிறப்பாக அமையும் குரு வக்கிர காலத் தில் சிலருக்கு தொழிலில் சிறு இடையூறுகள் வந்து மறையும்.  சரியான தீர்வுகளுக்கு உங்களின் எதிர்கால வளம் பெற அடுத்த பெயர்ச்சி நல்ல பலனை பெற்று தரும். இந்த குரு பெயர்ச்சி லாப நஷ்டம் கலந்து வந்தாலும் கூடுதலான நற்பலன்களையே பெறுவீர்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமை நவகிரக குருவுக்கும் தட்சணாமூர்த்திக் கும் மஞ்சள் ஆடைகட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லாம் தொடர்ந்து நன்மையாக அமையும்.