2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

எதையும் எதிர் கொண்டு செயல்படும் மிதுன ராசி வாசகர்களே!

இந்த குரு பெயர்ச்சி உங்களின் ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் குரு அமர்ந்து ராசியை பார்ப்பதும், உங்களின் மூன்றாமிடம், பஞ்சமஸ்தானத்தையும் குரு பார்ப்பதும் உங்களின் சகல காரியமும் செயல்படதுவங்கும் காலமாக அமையும். ராசியை குரு பார்ப்பதால் உடலில் ஆரோக்கியத்திலும், பராமரிப்பிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல நாட்பட்ட உடல் உபாதைகள் மறையும். சொந்த உறவுகள் கூட பகையாகி நெஞ்சழுத்தம் உண்டாகும். அதிலிருந்து விடுபடுவீர்கள். தெள்ள தெளிவான பேச்சாற்றல் பெறுவீர்கள்.

மனைவி மூலம் பெற வேண்டிய சில நற்பலன்களை பெறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். தொடர் முயற்சிக்கு நல்ல பலன் பெறுவீர்கள். நினைத்ததெல்லாம் கிட்டும். உங்களின் மனதில் தைரியமும், துணிச்சலும் சகல காரியத் திற்கு வலிமையை பெறுவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பது புத்திரர்களின் கல்வி மற்றும் தொழில் வளம் சம்மந்தமான சில முக்கிய முடிவுகளை உடனே எடுக்க வேண்டி வரும். அதற்கான பொருளாதார வளத்தையும், உதவியையும் பெற்று மேன்மை அடைவீர்கள். தெய்வ அனுகூலம் பெற்று தடைபட்ட பல காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். 

வரும் 13.04.2022 முதல் அதிசார குரு உங்களின் தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து தன, சுக, சத்ரு ஸ்தானத்தை பார்ப்பது உங்களுக்கு மேலும் நல்ல பலன்களை பெறுவீர்கள்.வாகன யோகம் பெறுவதும் அமையும். எதிர்கால திட்டங்கள் செயல்பட துவங்கும். வளமான வளர்ச்சியை பெறுவீர்கள். 

குரு வக்கிரகதியில் பயணிக்கும் போது உங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு புதிய சொத்து வாங்கும் நிலை உருவாகும். எதையும் விரிவுபடுத்திக் கொள்ளும் நிலை மேம்படும்.

பரிகாரம்:

ஒவ்வொரு வியாழக் கிழமையும் காலை 06 - 07 மணிக்குள் நவகிரக குருவுக்கு கொண்டை கடலை 108 மாலை கட்டி போட்டு ஒரு நெய் தீபம் ஏற்றி வணங்கி வர சகல காரியமும் வெற்றி உண்டாகும்.