2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - மீனம்

காலத்திற்கு தகுந்தபடி யோசித்து செயல்படும் மீன ராசி வாசகர்களே!

13.11.2021 முதல் குரு, விரைய குருவாக அமர்ந்து ஆறாமிடமான சத்ரு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். முதலில் சுகஸ்தானத்தில் குரு பார்வையால் வாகனம் வாங்கும் யோகத்தையும், புதிய வீடு, சொத்து வாங்கும் யோகத்தை பெறுவீர்கள். மறைவுஸ்தானத்தை குரு பார்ப்பதால் வங்கி கடன் மூலம் தொழிலை மேம்படுத்தி கொள்வது, ஏற்கனவெ நடந்து கொண்டிருக்கும் தொழிலை வளப்படுத்திக் கொள்ள வேண்டிய உதவிகளையும் பெறுவீர்கள் காரியத்தில் கண்ணாக இருந்து செயல்படுவீர்கள். உங்களை அவமானப்படுத்தி பார்க்க வேண்டுமென்று நினைத்தவர்களை தலை குனிய வைப்பீர்கள்.

உங்களின் ஆதரவில்லாத எந்த காரியமும் செயல்படாது என்ற நிலை உருவாக்கி கொள்வீர்கள். கால மாற்றத் திற்கு தகுந்தபடி தொழில் வளத்தையும் மாற்றிக் கொள்வீர்கள். சரியான பாதையை தேர்வு செய்து உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலனை பெறு வீர்கள். உங்களின் ராசிநாதன் என்பதால் விரையம் அதிகம் வருவதை தடுத்து நன்மையே செய்வார்.

வரும் 13.04.2022 முதல் அதிசாரமாக ராசியில் அமரும் குரு ஐந்து மாதம் ராசியில் இருந்து பஞ்சம ஸ்தானத்தையும் களத்திர ஸ்தானத் தையும், பாக்கியஸ்தானத்தையும் பார்ப்பது உங்களுக்கு மேலும் நற்பலன்களே தருவார் எதை செய்தால் நன்மை என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். குறைந்த முதலீடுகளில் நல்ல லாபம் அடையப்பெறுவீர்கள்.

செய்து கொண்டிருக்கும் தொழிலை மேலும் விருத்தி செய்து கொள்ள ஒத்துழைப்பு கிடைக்கும். சரியான வளர்ச்சி பாதையை தேர்வு செய்து வளம் பெறுவீர்கள். புனித பயணம் செய்து வருவது வெளிநாட்டு தொடர்புகள். வெளி நாட்டு தொழில் வாய்ப்புகள் அமையும். வக்கிர குரு காரியங்களில் நண்பர்களிடம் கூட எச்சரிக்கையாகவும். பணப்பிரச்சனைகளில் கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்:

வியாழக்கிழமை தோறும் சிவன் ஆலயம் சென்று தட்சணாமூர்த்திக்கு மஞ்சள் ஆடை உடுத்தி மூன்று நெய் தீபமிட்டு உங்களின் வேண்டுதலை சொல்லி வர உங்களின் அனைத்து காரியமும் வெற்றியை பெற்றுத் தரும்.

கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
வாடிபட்டி R.ஆனந்தன்
செல் - 91-9789341554