2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - மகரம்

தெளிந்த மனத்துடன் செயல்படும் மகர ராசி வாசகர்களே!

13.11.2021 முதல் தன ஸ்தானத்தில் குரு அமர்ந்து, சத்ரு ஸ்தானத்தையும், அட்டம ஸ்தானத்தையும். தொழில் ஸ்தானத்தையும்  பார்வையிடுவதால், உங்களின் கடந்த கால மன உளைச்சலுக்கும், கடந்த கால தொய்வுகளுக்கும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் முடக்கம் சீராகி, விரைவில் நீங்கள் துவங்க இருந்த தொழிலை மீண்டும் தொடங்குவீர்கள்.  பாதிப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின், ராசிக்கு தனஸ்தானத்தில் குரு அமருவது உங்களின் பொருளாதார மேன்மைக்கு நல்ல பலனை பெற்று தரும். சுமையாக இருந்து வந்த பல விடயங்கள், விரைவில் நன்மையை பெற்றுத் தரும்.

நீங்கள் காத்திருந்த காரியம் கைகூடும். சத்ரு ஸ்தானத்தை பார்ப்பது மறைமுகமான எதிரி தொல்லை நீங்கி, சுபிட்சம் பெறுவீர்கள். கவலையை மறந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். அட்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால், பதவி உயர்வு, புதிய பதவி போன்றவற்றில், சாதகமான சூழ்நிலை உருவாகும். நினைத்த காரியம் செயல்படதுவங்கும் போது, மனதிற்கு மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தரும். உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால், தொழிலில் இருந்து வந்த தேக்கநிலை மாறி, சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள். 
 
13.04.2022 முதல் குரு அதிசாரமாக செல்வது இன்னும் நற்பலன்களை பெற்றுத் தரும். மூன்றாமிடத்தில் குரு அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் பார்பதால் உங்களின் அனைத்து காரிய மும் அமையும் திருமண தடை நீங்கும். புனித யாத்திரை சென்று வருதல், மேலோட்டமாக செய்து வந்த காரியம் இனி முழுவீச்சில் நடக்கும். பதில் சொல்ல முடியாமல் இருந்து வந்த நீங்கள் அனைத்துக் விடை தெளிவாக அறிந்து கொள்வீர்கள். வக்கிர குருவால் உங்களின் பொருளாதார நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். 

பரிகாரம்:

வியாழக்கிழமை தோறும் தவறாமல் நவகிரக குருவுக்கு கொண்டைகடலை மாலையும். மஞ்சளில் கோலம் இட்டு ஒரு நெய் தீபமிட்டு உங்களின் வேண்டுதலை சொல்லிவர சகல காரியமும் வெற்றி தரும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக அமையும்.