2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

பாதகங்களை சாதகமாக அமைத்து கொள்ளும் கும்ப ராசி வாசகர்களே!

13.11.2021 முதல் குரு, ஜென்ம குருவாக அமர்நது பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும்,. பாக்கிய ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுவதால், உங்களின் ராசிக்கு சிறப்பான பலன்களை பெறுவீர்கள். குருவருள் இருந்தால் திருவருள் தானே வரும் என்பது போல விரைய சனியின் காலத்தில் குருவின் அனுக்கிரகத்தால் வளமான வளர்ச்சியை பெறுவீர்கள். மாற்றங்களை விரும்பும் உங்களின் செயல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். புத்திரர்களின் தொழில் வளமும், நல்ல வேலையையும் பெற்று தருவீர்கள். உங்களின் களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் திருமண காரியங்கள் சிறப்பாக நடக்கும். புத்திர புத்திரி களுக்கு திருமணம் பேசி முடிப்பீர்கள். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதும், புதிய நண்பர்கள் சேர்க்கை மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். நினைத்த படி எல்லா காரியங்களும் நடக்கும். உங்களின் பாக்கியஸ்தானத்தை பார்ப்பது கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். சிலருக்கு ஜாதக கோளாறுகளால் பல தடைபட்ட விடயங்களுக்கு பரிகாரம் மூலம் தீர்வு கிடைக்க பெறுவீர்கள். புனித தீர்த்த யாத்திரை செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் 

13.04.2022 முதல் அதிசாரமாக குரு செல்வது, உங்களின் ராசிக்கு மறைவு ஸ்தானங்களை பார்ப்பது உங்களுக்கு நல்ல தீர்வை பெற்று தரும். எதிர் கொண்டு செயல்படும் காரியங்களில் நல்ல முன்னேற்றம் காண்பீர் கள். தொழில் ஸ்தானத்தை வளப்படுத்திக் கொள்ள சில ருக்கு சந்தர்ப்பம் அமையும். வேறு கிளைகளை துவங்கவும்,, தொழிலை மாற்றிக் கொள்ளும் சூழலும் அமையும். உங்களின் சுய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வக்கிர குரு வரும் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. 

பரிகாரம்:

வியாழக்கிழமை தோறும் நவகிரக குருவுக்கு 3 நெய் தீபமேற்றி, கொண்டைகடலை சுண்டல் (கருப்பு) செய்து நைவேத்தியம் வைத்து உங்களின் வேண்டுதலை சொல்லிவர, நீங்கள் எதிர்பார்த்த அனைத்து நற்பலன்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.