2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - கன்னி

விரும்பிய வாழ்க்கை விரைவில் எட்டி பிடிக்கும் கன்னி ராசி வாசகர்களே!

வரும் குரு பெயர்ச்சி உங்களின் ராசிக்கு 13.11.2021 முதல் ஆறாமிடமான சத்ரு ஸ்தானத்தில் குரு அமர்ந்து உங்களின் தன ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தையும் பார்க்கிறார். எதிரிக்கு கூட துரோகம் நினைக்காத உங்களுக்கு, எதிரிகளிடமிருந்து அடிக்கடி ஏதாவது தொல்லைக் கொடுப்பதும் அதனால் அவர்கள் அவமானப்படுவதும் உண்டாகும்.

உங்களின் தனஸ்தானத்தை குரு பார்ப் பதன் மூலம் பொருளாதார வளதைப் பெறுவீர்கள். எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்களின் தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால், ஏற்கனவே இருக்கும் தொழிலை மேம்படுத்திக் கொள்வதற்கான வசதிகளும், வாய்ப்புகளும் கிடைக்கும். இது வரை நண்பர்கள் சிலர், உங்களுக்கு சில உதவிகளை செய்தாலும், உங்களின் முன் ஏற்பாடுகளுக்கு தகுந்த வழியை வளர்த்துக் கொள்வீர்கள். மார்ச் மாதம் வரும் ராகு / கேது பெயர்ச்சி உங்களுக்கு சில தடைகளை தருவதால் புதிய தொழில் முயற்சியை யோசித்து செய்வது நல்லது. உங்களின் விரைய ஸ்தானத்தை பார்க்கும் காலம் வரை உங்களுக்கு எந்த இழப்பீடு வராமல் குரு பார்த்து கொள்வார். 

வரும் 13.04.2022 முதல் அதிசார குரு உங்களின் ராசியை பார்ப்பது உடல் நலனுக்கு முன்னேற்றம் தருவார். லாபஸ்தானத்தையும், தைரிய ஸ்தானத்தையும் பார்ப்பது உங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் பெற செய்வார். இருப்பினும் ராகு / கேதுவால் அனுபவிக்க முடியாமல் தடை வரும். என்பதால் இந்த தெய்வ வழிபாடுகளை செய்து வந்தால், வளம் பெற முடியும் வக்கிர குரு உங்களின் பொருளாதாரத்தை பெருக்க செய்வார் எதையும் செயல்படுத்த கூடிய தைரியத்தையும், செயல்தனையும் பெற்று தருவார். இந்த ஓராண்டு எல்லாம் சமமாக இருக்கும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு ஐந்து நெய் தீபமிட்டு எலுமிச்சை (தேசிகாய்) அன்னதானம் செய்துவர, உங்களின் அனைத்து விடயங்களும் தடைகள் நீங்கி, நலன் பெற செய்யும். எதிரி தொல்லை நீங்கும்.