2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - கடகம்

வளமான வாழ்வை விரும்பி செயல்படும் கடக ராசி வாசகர்களே!

வரும் குரு பெயர்ச்சி 13.11.2021 முதல் ஓராண்டு காலம் உங்களின் ராசிக்கு நன்மையும், தீமையும் கலந்து அனுபவிக்கும் சூழ்நிலை உண்டாகும். நிலையான தொழில் வாய்ப்புகளை சிலர் பெறுவீர்கள். வேலையின்மை, காரிய தடை, மருத்துவ செலவு, கடன் பிரச்சனை, வழக்குகளில் பின்னடைவு போன்ற நிகழ்வுகளிலிருந்து படிப்படியாக மீள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த குறைகள் நீங்கி மீண்டும் வெளிவரும் வாய்ப்புகளை பெறுவீர்கள். 

உங்களின் ராசிக்கு அட்டம குருவாக அமர்ந்து விரையத்தையும் தனஸ்தானத் தையும் சுகஸ்தானத்தையும் பார்வை பெறுவது உங்களுக்கு நல்ல பலனை பெற்று தருவார். அட்டமத்தில் அமர்ந்து விரையஸ்தானத்தை பார்ப்பது உங்களின் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளும் நல்ல வாய்ப்பை பெறுவீர்கள். உங்களின் தனஸ்தானத்தை பார்ப்பது பொருளாதார நிலையில் தேவைகளுக்கு தகுந்த வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள்.

நீண்ட நாள் தொழில் வாய்ப் பைப் பெற முயற்சி எடுத்து தடை பட்ட நிலைமாறி அதற்கான வழிகளை பின்பற்றி நன்மை அடைவீர்கள். உங்களின் சுகஸ்தானத்தை பார்ப்பது வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குதல் போன்ற அத்தியாவசிய செலவுகளில் இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும்.

வரும் 13.04.2022 முதல் அதிசாரமாக குரு அமைவது உங்களின் சகல காரிய அனுகூலமும் உண்டாகும். உங்க ளின் முயற்சிக்கு நல்ல பலன் கள் கிட்டும். பூர்வீக சொத்து சம்மந்தமான பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புத்திரருக்கு வேலை திருமணம் போன்ற நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். குரு வக்கிரகதி அடையும் போது இடமாற்றம், தொழில் மாற்றம் பொருளாதார நிலை மாற்றம் உண்டாகும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு அனைத்து வளமும் கிடைக்க பெற்று சிறந்து விளங்குவீர்கள்.

பரிகாரம்:

ஒவ்வொரு வாரமும் வியா ழக்கிழமை ஜீவசமாதி சென்று வழிபாடு செய்தல், நவகிரக குருவை வணங்கி மஞ்சள் ஆடை அணிவித்து நெய் தீபம் ஒன்று ஏற்றி வணங்கி வர எல்லா நாளும் சிறந்த நாட்களாக அமையும்.