2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - தனுசு

நிகழ்காலத்தை மட்டும் யோசித்து செயல்பாடுகளை செய்யும் தனுசு ராசி வாசகர்களே!

குரு பெயர்ச்சியாகி, உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் குரு அமர்ந்து, களத்திர ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வை இடுவதால், உங்களின் வாழ்க்கைக்கு சிறப்பான பலன்களை பெற்று தருவார். நீங்கள் நினைத்ததை நடத்தி கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பெறுவீர்கள். திருமண தடைகளால் தாமதமான திருமணம் விரைவில் நடக்கும். உங்களின் கூட்டு தொழில் சிறப்பாக அமையும். எதிர்கால சிந்தனை மறந்து வாழ்வை வெளிபடையாக வாழ்ந்து காட்டுவீர்கள். வெளிநாடு செல்ல சிலருக்கு வாய்ப்பு கிட்டும். உங்களின் ராசிக்கு யோகாதிபதி வீட்டை குரு பார்ப்பதால், யோகாதிபதி மூலமும் கிடைக்கும் அனைத்து பலன்களையும் உங்களுக்கு குருவும் கிடைக்க செய்வார். அர சாங்க வேலை, அரசாங்க சலுகை, அரசு சம்மந்தமான உதவிகளையும் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்க பெறுவீர்கள். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் விதமாக அமையும். பணியிலிருந்து வருபவர்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களும் நிலுவை தொகையும் வந்து சேரும்.

13.04.2022 முதல் குரு அதிசாரமாக செல்வது சுக ஸ்தானாதிபதியாக குரு அமைவதால், உங்களின் தேவைகளுக்கு தகுந்த வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். அட்டமஸ்தானமும் தொழில் ஸ்தானமும் விரையஸ்தானமும் குரு பார்வை பெறுதால் தொழிலிலும், உத்தி யோகத்திலும் உங்களுக்கு நற்பலன்களை பெற்று தருவார். ராகு / கேது பெயர்ச்சி மூலம் சிலருக்கு இன்னும் நற்பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். குறைந்த முதலீடுகளில் அதிக லாபம் பெறும் வாய்ப்புகளை பெறுவீர்கள். சாதனைகளை வென்று காட்டுவீர்கள். வக்கிரகதி குருவால் உங்களின் பொருளாதார நிலை சற்று குறையும். நெருக்கடி இருந்தாலும் உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கப் பெற்று வளம் பெறுவீர்கள். 

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மஞ்சள் வைத்து ஒரு நெய் தீபம் ஏற்றி, வணங்கி உங்களின் வேண்டுதலை சொல்லி வர உங்களின் எண்ணம் போல் வாழ்வு அமையும். சிலர் சாதனையாளராகவும் வெற்றிப் பெறுவார்கள்.