16-12-2020 முதல் 31.12.2020 வரை

16-12-2020 முதல் 31.12.2020 வரை

மேஷம் - நிரந்தமான பணிகளில் ஈடுபடுவீர்கள். சிறந்த நட்பு கிடைக்கும் தொழிலில் மேலும் வளம் பெறுவீர்கள். வெளிநாட்டு செய்தியாய் சாதகமான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 9, 2, 4.
பரிகாரம் - விநாயகர் வழிபாடு செய்யவும்.
 
ரிஷபம் - புதிய திட்டங்களுக்கு எடுக்கப்படும் முயற்சிகள் நல்ல பலனை தரும். வங்கி கடன் விரைவில் கிடைக்கும். தொழிலில் கூடுதல் முன்னேற்றம் பெற்று பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 3, 6.
பரிகாரம் - சுப்ரமணியர் வழிபாடு நன்மை தரும்.
 
மிதுனம் - தொழில் சம்மந்தமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும் கடன் சுமை குறையும். விரும்பிய வாழ்க்கையை அமைத்து கொள்வீர்கள். தனலாம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 5, 1, 2.
பரிகாரம் - விநாயகர் வழிபாடு, அம்மன் வழிபாடு நற்பலனை தரும்.
 
கடகம் - போட்டிகள் மறையும் குறைந்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். அவசர தேவைகளுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். தொழிலில் மேன்மை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 4, 3, 9.
பரிகாரம் - நாகதேவதை வழிபாடு தடைகளை நீக்கும்.
 
சிம்மம் - சிறந்த நிர்வாக திறமையுடன் செயல்படுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். அரசியலில் எதிர்ப்பு குறைந்து முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, பச்சை, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 1, 4, 5.
பரிகாரம் - விநாயகர் வழிபாடு, அம்மன் வழிபாடு சிறப்பை தரும்.
 
கன்னி - கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வீர்கள். நெருக்கடிகள் குறைந்து உங்களின் பணியை சிறப்பாக செய்வீர்கள். முதலீடுகளில், சிலருக்கு தொழிலில் கமிஷன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 8.
பரிகாரம் - மாரியம்மன் வழிபாடு சிறப்பான வாழ்வைத் தரும்..
 
துலாம் - எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை கொண்டு செயல்படுவீர்கள். காரியத் தடை வந்தாலும் சொந்த திறமையால் எதிர்கொள்வீர்கள். தொழிலில் அதிக முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, நீலம், சிவப்பு,
அதிர்ஷ்ட எண் - 1, 6, 8.
பரிகாரம் - நவகிரக வழிபாடு செய்து, கேதுவுக்கு தேங்காய் எண்ணெய் தீபமிடவும்.
 
விருச்சிகம் - திட்டமிட்ட காரியம் சரியான நேரத்தில் நடக்கும். உங்களின் எண்ணம் போல் வாழ்வு அமையும். முக்கிய காரியங்களை தாமதமின்றி செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண் - 1, 4, 7.
பரிகாரம் - செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனை வணங்கி தீபமிட்டு வழிபாடு செய்யவும்..
 
தனுசு - தொழிலில் இதுவரை இருந்து வந்த தடங்கல் நீங்கும், தன வரவு நன்றாக இருக்கும். உடல் நலனில் முன்னேற்றம் தரும். பணியில் உங்களுக்கு இருந்து வந்த இடையூறு மறையும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 1, 2, 7.
பரிகாரம் - ஆஞ்சநேயரை வணங்கி மிருகத்திற்கு உணவு அளித்து வேண்டிக் கொள்ளவும்.
 
மகரம் - சுபாரியங்கள் சிறப்பாக நடக்கும். வெளியிடங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சிலருக்கு உறுதியாகும். உங்களின் நம்பிக்கை வெற்றி தரும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், வெண்மை, கருப்பு.
அதிர்ஷ்ட எண் - 1, 6, 8.
பரிகாரம் - நவகிரக வழிபாடு செய்து நல்லெ்ணணெய் தீபமிடவும்.
 
கும்பம் - அவசர முடிவுகளை தவிர்க்கவும். புத்திரர்களின் வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளை செய்வீர்கள். தொழிலில் கவனமுடன் செயல்படுவதும் முதலீடு செய்வதும் மிக நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 5, 8.
பரிகாரம் - சுவாமி ஐயப்பனை உளமாற நினைந்து வழிபாடு செய்யுங்கள், நினைத்தது நிறைவேறும்..
 
மீனம் - கடல் கடந்த நற்செய்தி உங்களை உற்சாகப்படுத்தும். தடைப்பட்ட காரியங்கள் மேலும் நன்மையைத் தரும். தொழிலில் முதலீடு செய்து அதிக லாபம் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், ஆரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 7
பரிகாரம் - சுப்ரமணியரை வணங்கி சிவப்பு நிற பூ வைத்து வேண்டுதல் செய்தல் நன்மை தரும்.