16-08-2021 முதல் 31-08-2021 வரை

16-08-2021 முதல் 31-08-2021 வரை

மேஷம்
விழிப்புடன் செயல்படுவீர்கள். குறைந்த பட்ச செயல் திறனுடன் தொழிலில் முன்னேறும் வழியை செயல்படுத்துவீர்கள். மனதிற்கு இதமான விடயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 9.
பரிகாரம் - பௌர்ணமி அன்று நடராஜர் தரிசனம் செய்வதும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளவதும் உங்களின் வாழ்வில் வளமும், பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள். 
 
ரிஷபம்
விரைவாக செயல்படுவது உங்களின் தொழிலில் வளம் பெற வழிவகுக்கும். நிலையான உங்களின் மனவலிமை உங்களுக்கு செயல்படுவதற்கு ஊக்கத்தை தந்து மேன்மை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, நீலம், மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 8.
பரிகாரம் - சிவன் ஆலயத்தில் பௌர்ணமி பூஜையில் கலந்து கொள்வதும். சிவனுக்கு வில்வ மாலை போட்டு வணங்கி வர தொழிலிலும், உத்தியோகத்திலும் ஏற்றம் பெறுவீர்கள்.
 
மிதுனம்
வருவது வரட்டுமென்று காத்திருக்காமல் செயலில் இறங்கி விடுவீர்கள். பொறுப்புகளில் கவனமுடன் செயல்பட்டு எதிர்கால வலிமையை பெறுவீர்கள். சரியான திட்டங்களை தாமதபடுத்தாமல் செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 5.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடும், மிளகு பச்சை துணியில் கட்டி நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர தொழிலிலும், உத்தியோகத்திலும் நலமும் வளமும் பெறுவீர்கள்.
 
கடகம்
கடந்து வந்த பாதை கரடு முரடாக இருந்தாலும் அதை சரிசெய்வது உங்களின் கடமையாக அமையும். அரை குறையாக இருந்த பணிகள் முழுமை அடைய, வேண்டிய பணிகளை செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, வெண்மை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 1, 2, 9.
பரிகாரம் - ஞாயிறு மாலை ராகு காலத்தில் நவக்கிரக வழிபாடு செய்து 3 நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர எடுத்த காரியம் வெல்லும். பழிச்சொல் மறைந்து வளம் பெறுவீர்கள்.
 
சிம்மம்
உடல் பலமும், உள்ள பலமும் உறுதி தன்மையும் பெறுவீர்கள். கருத்து வேறுபாடுகளால் பிரிந்தவர்கள் வலிய வந்து இணைவார்கள். பொருளாதாரம் சிறக்கும். சிறுதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 5.
பரிகாரம் - பௌர்ணமி அன்று அம்மனுக்கு சிவப்பு நிற பூ மாலை அணிவித்து மஞ்சள் பொடி வைத்து வேண்டிக்கொள்ள அனைத்து காரியமும் உங்களுக்கு சாதகமாக அமையும். 
 
கன்னி
உலக அனுபவங்களை பெற்று தெளிவு பெறும் காலமாக அமையும். தெரிந்த விடயங்களுக்காக உங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி கொள்வீர்கள். முக்கிய சில காரியங்களை முன்னின்று செயல்படுத்தி பாராட்டு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, ஆரஞ்சு, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 5, 8, 9.
பரிகாரம் - பச்சை பட்டு துணியில் வெங்கபட்டை, பச்சை கற்பூரம் வைத்து வெள்ளிகிழமை, ஞாயிறுகளில் பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி வர தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறந்த பொருளாதார வளம் பெறுவீர்கள்.
 
துலாம்
குறை சொல்பவர்களை கண்டு அஞ்சாமல் உங்களின் கடமையை செய்து வருவீர்கள். பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு செயல்பாடுகளை விரைவுபடுத்தி செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 8.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் ராகு / கேதுக்கு நெய் தீபமிட்டு நவகிரகத்தை மூன்று முறை வலம் வந்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியைத் தரும். எதிர்பார்த்த காரியம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
 
விருச்சிகம்
பொருளாதார வளர்ச்சிகளை மனதில் கொண்டு உங்களின் செயல்பாடுகள் அமையும். எதிர்வரும் செயல்களை கண்டு துவண்டு விடாமல் செயலில் உறுதியுடன் செயல்பட்டு மேலும் வளம் பெறுவீர்கள். சிலருக்கு அதிர்ஷ்ட சூழ்நிலை அமையும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 9.
பரிகாரம் - செவ்வாய் கிழமை ராகு காலத்தில் நவக்கிரக வழிபாடு செய்து நெய் தீபமிட்டு நவக்கிரக குருவுக்கு கொண்டைக்கடலை வைத்து வேண்டிக் கொள்ள எல்லாம் எதிர்பார்த்தபடி அமையும், கேட்டது விரைவில் கிடைக்கும். பொருளாதார செழிப்பு உண்டாகும்.
 
தனுசு
திடமான நம்பிக்கையே உங்களின் வாழ்வில் செழிப்பும், வளமும் பெற செய்யும். போட்டிகளும், சிறு குடும்ப சச்சரவும் வந்தாலும் அதனை எதிர் கொண்டு சமாளித்து விடுவீர்கள். செயல் திறன் வளம் பெற செய்யும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், வெண்மை, பச்சை.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 8.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை  / வெற்றிலை மாலை சாத்தி உங்களின் வேண்டுதலை சொல்லி வர உங்களின் எதிர்பார்ப்புகள் சரியாகும். முக்கிய விடயங்களில் சாதகமான சூழ்நிலை உருவாகும்.
 
மகரம்
மாற்றங்களை எதிர்பார்க்கும் உங்களுக்கு அதற்கான சூழ்நலை உருவாகும். காலத்திற்கு தகுந்த தொழில் வாய்ப்பை பெறுவீர்கள். விறுவிறுப்பான உங்களின் செயல்களால் நினைத்தபடி செயல்பட வழி கிடைக்கும். பண பலம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 8.
பரிகாரம் - வியாழக்கிழமை தட்ணாமூர்த்தி / நவகிரக குரு வழிபாடு செய்து 3 நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ளவதால் தொழிலிலும், உத்தியோகத்திலும் உங்களின் செயல்பாடுகளால் மேன்மையும், பாராட்டும் பெறுவீர்கள்.
 
கும்பம்
குற்றங்குறைகளை களைந்து வளம் பெறும். சூழ்நிலை உண்டாகும். பொருளாதார வளம் பெற்றாலும் செலவினம் தவிர்க்க முடியாததாக இருக்கும். சுபவிரையம் செய்யவில்லை எனில் மருத்துவ செலவு வந்து பொருள் இழப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், கருப்பு.
அதிர்ஷ்ட எண் - 3, 4, 8.
பரிகாரம் - ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் நவக்கிரகத்தை ஒன்பது முறை சுற்றி 5 நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள உங்களுக்கு வரும் சோதனை பனிபோல மறைத்து நன்மையும். பெரும் புகழும் கூடும்.
 
மீனம்
காலத்திற்கு எது சரியான தீர்வோ அதனை செயல்படுத்தி வளம் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் தீரும். தொழிலில் உங்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்த மாற்றம் உண்டாகும். புதிய தொழில் சார்ந்த முடிவுகள் நல்ல பலனை பெற்று தரும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், ஆரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 9.
பரிகாரம் - செவ்வாய்க் கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி நெய் தீபமிட்டு வணங்கிவர எல்லாம் நன்மையாய் நடக்கும்.
 
கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
வாடிபட்டி R.ஆனந்தன்
செல் - 91-9789341554