01-08-2021 முதல் 15-08-2021 வரை

01-08-2021 முதல் 15-08-2021 வரை

மேஷம்
விருப்பமான செயல்பாடுகள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைய முடியும். சோதனைகளை சாதனைகளாக ஆக்கி கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 9.
பரிகாரம் - வெள்ளை நிற பூவில் அம்மனுக்கு அலங்காரம் செய்து விளக்கு ஏற்றவிட வெள்ளிக்கிழமைகளில் செய்துவர உங்களின் எண்ணம் ஈடேறும்.
 
ரிஷபம்
பல நாட்கள் தேங்கி கிடந்த காரியங்கள் செயல்பட துவங்கும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். வசதிகளுக்கு தகுந்த வரவு வந்து வாழ்வு வளம் பெறும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, பச்சை, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 5, 6, 8.
பரிகாரம் - பவளமல்லி / சிவப்பு நிற பூவில் சுப்ரமணியருக்கு மாலை இட்டு நெய் தீபமிட்டு செவ்வாய் கிழமை வேண்டிக்கொள்ள சகல காரியமும் நலம் பெறும்.
 
மிதுனம்
நடக்க வேண்டிய காரியம் தாமதம் ஆனாலும் உங்களின் பணி சிறப்பாக இருக்கும். தேவைகளுக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 6.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பச்சை நிற ஆடையும் வெண் நிற பூவும் வைத்து வேண்டிக்கொள்ள நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
 
கடகம்
எதைச் செய்தால் நல்லது என்று முடிவு எடுத்தீர்களோ அது தன்னால் நடக்கும். இடைநின்ற சில காரியம் மீண்டும் செயல்படதுவங்கும். புதிய கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், வெண்மை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 2, 8, 9.
பரிகாரம் - சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலை மாலை அணிவித்து நெய் தீபமிட்டு வணங்கி வர உங்களின் வேண்டுதல் சிறப்பாக அமையும்.
 
சிம்மம்
ஆற்றலிலும், அறிவிலும் சிறந்து விளங்குவீர்கள். இடத்திற்கு தகுந்தபடி உங்களின் சூழ்நிலைகளை மாற்றி கொண்டு நீங்கள் நினைத்தை சாதித்து காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள், பச்சை.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 6.
பரிகாரம் - திங்கள் கிழமைகளில் சிவப்பு நிற பூ வைத்து சிவனுக்கு அர்ச்சனை செய்து நெய் தீபமிட்டு வணங்கி வர சகல காரியமும் ஜெயமாகும்.
 
கன்னி
புதிய திட்டங்களை வழிவகுத்து கொள்வீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை உங்களுக்கு நல்ல பலனை தரும் எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, வெண்மை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 9.
பரிகாரம் - வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்மனுக்கு எலுமிச்சை கனி மாலை போட்டு நெய் தீபமிட்டு ராகு காலத்தில் வணங்கி வர தடையற்ற செயல்பாடுகள் விளங்கும்.
 
துலாம்
செயலில் துணிச்சலும், பணி செய்வதில் பண்பும் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும் தொழிலில் மேன்மை பெற்று வளமாக வாழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 8.
பரிகாரம் - வியாழக்கிழமைகளில் காலை 06 - 07 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி பலவண்ணமலரால் மாலை கட்டி போட்டு வேண்டிக் கொள்ள அனைத்து செயல்களும் வெற்றியை தரும்.
 
விருச்சிகம்
தொழில் வளம் பெற தேவையான முயற்சிகளில் ஈடுபாடு கொண்டு விரைவாக செய்து முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர் சந்திப்பு உங்களுக்கு திருப்புமுனையாக அமையும். மனஅழுத்தமும், தேவையற்ற கவலையும் தீரும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 9.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை மகாலெட்சுமிக்கு வெள்ளை நிற பூ வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் சீக்கிரம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
 
தனுசு
குடும்பத்தில் சிலருக்கு தேவையற்ற சச்சரவு வரலாம். எதிலும் அமைதியுடன் இருப்பது நல்லது. தொழிலில் உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் தேவையான பொருளாதார வளம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், பச்சை, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 6.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு எள் சாதம் வைத்து வழிபாடு செய்து வர சகல காரியமும் நன்மையாக அமையும்.
 
மகரம்
எதிலும் நம்பிக்கையின்மையுடன் தைரியமின்றி செயல்படுவீர்கள். சிலருக்கு தொழிலில் புதிய வாய்ப்பு அமையும். திருமண முயற்சி பெண்களுக்கு ஜாதகமாக அமையும். சேமிப்புகளால் தேவைக்கு எடுத்து பயன்படுத்தி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 8.
பரிகாரம் - சனிக்கிழமை நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு உளுந்து கலந்த அன்னம் தானமும் நைவேத்தியம் செய்து வர நினைத்தபடி எல்லாம் சரியாக நடக்கும்.
 
கும்பம்
திட்டமிட்ட காரியங்களில் சிலருக்கு ஜாதகமான சூழ்நிலை அமையும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் விரைவில் கிடைக்க பெறுவீர்கள். தவிர்க்க முடியாத புதிய செலவுகள் வரும்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், கருப்பு.
அதிர்ஷ்ட எண் - 3, 4, 8.
பரிகாரம் - ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்குள் நவகிரக வழிபாடு செய்து மஞ்சள் பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியத்திலும் வெற்றி கிட்டும்.
 
மீனம்
புதிய விடயங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழிலில் உங்களின் செயல் திட்டம் எதிர்காலத்தில் நல்ல பலனை தரும். தீர்த்த யாத்திரை சென்று வர சிலருக்கு வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 8, 9.
பரிகாரம் - செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்கு நெய் தீபமிட்டு வெண் பொங்கல் நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் சகல காரியத்திலும் வெற்றியும் வளமும் பெறுவீர்கள்.
 
கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
வாடிபட்டி R.ஆனந்தன்
செல் - 91-9789341554