01.03.2021 முதல் 15.03.2021 வரை

01.03.2021 முதல் 15.03.2021 வரை

மேஷம்
 
வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுவீர்கள். தனி திறமையுடன் எதையும் சாதித்துக் காட்டுவீர்கள். எளிமையை விரும்பி செயல்படுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, சிவப்பு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 1, 6, 9.
பரிகாரம் - வியாழக்கிழமை 6 - 7-க்குள் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபம் எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டுதல் நலம்.
 
ரிபம்
 
சாதாரண விடயமாக இருந்தாலும் அதனை கவனமுடன் செய்து நன்மை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களும் தொழிலில் நிரந்தர தன்மையும், வெளிபடையான பேச்சும் வெற்றியை தரும்.
 
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 6.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கெண்ணெய் தீபமும், சிவப்பு நிற பூ வைத்து வேண்டுதலும் தரும்.
 
மிதுனம்
 
சாதிக்க வேண்டிய நேரத்தில் தவறாமல் செய்து பாராட்டு பெறுவீர்கள். நிதானமான போக்கு நன்மையைத் தரும். பாதியில் நின்ற செயல்களை செயல்படுத்த முயற்சிகளை செய்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 8.
பரிகாரம் - ஹயக்கிரிவர் தரிசனம் செய்தல், பெருமாள் ஸ்லோகம் சொல்லி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தல் ஆகியவை நினைத்ததை நடக்கச் செய்யும்.
 
கடகம்
 
சொந்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சாதிக்க நினைத்ததை இலக்காக கொண்டு செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகள் தாமதமாவது மனவருத்தத்தை உண்டாக்கும். 
 
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்டஎண் - 2, 3, 8.
பரிகாரம் - அம்மனுக்கு பச்சை நிற ஆடை தானம் செய்து வேப்பெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர சகல காரியமும் வெற்றி பெறும்.
 
சிம்மம்
 
சிறு சிறு தடைகள் வந்தாலும் உங்களுக்கு மூல தெய்வ அனுகிரகத்தால் நன்மை கிட்டும். சிறு தொழில் செய்து வரும் அன்பர்களுக்கு சிறப்பான வளர்ச்சியும், வருவாயும் கிட்டும்.
 
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, வெண்மை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 1, 6, 9.
பரிகாரம் - நரசிம்மர் வழிபாடு சிறப்பைத் தரும். செவ்வாய் கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து, நெய் தீபமிட்டு வேண்டுதல் செய்ய நன்மைகள் கிட்டும்.
 
கன்னி
 
எதிர்கால திட்டங்கள் செயல்பாடுகள் பற்றிய சிந்தனை வளர்ச்சிக்கு வழி கிடைக்கும். தடைக்கு எது காரணம் என்று அறிந்து அதனை கலைந்து வெற்றிப் பாதையை வகுப்பீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 5.
பரிகாரம் - பங்குனி உத்திரத்தில் குலதெய்வம், சிவன் வழிபாடு மிகவும் நற்பலன்களை தரும். நெய் தீபமேற்றி வேண்டுதல் நலம்.
 
துலாம்
 
சொல்ல வேண்டிய விடயத்தை அந்தந்த காலத்தில் சொல்ல தயங்காமல் வெளிபடுத்தி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தின் ஒற்றுமைக்ககாக பல சாதனைகளை செய்து காட்டுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, சிவப்பு, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 1, 6, 8.
பரிகாரம் - சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவருக்கு எள், தீபமும், அவரை பயறு நைவேத்தியமும் வைத்து வேண்டுதல் நலம்.
 
விருச்சிகம்
 
தேவைகளை உணர்ந்து அதற்கு தகுந்த காரியங்களை செய்து நன்மை அடைவீர்கள். தொழிலில் போட்டிகளை சமாளித்து, மனஉறுதியுடன் செயல்பட்டு வெற்றியின் இலக்கை அடைவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, வெண்மை, பலவர்ணம்.
அதிர்ஷ்ட எண் - 2, 7, 9.
பரிகாரம் - செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கும், மயிலுக்கும் விளக்கு ஏற்றி வேண்டிக்கொள்ள நன்மைகளை பெறுவீர்கள்.
 
தனுசு
 
குடும்பத்தில் இருந்து வரும் சச்சரவு நீங்கும். புதிய திட்டம் செயல்பட துவங்கும். வளர்ச்சி பலவழிகளில் உதவிகளுடன் வந்து சேரும். அவசர முடிவுகளை தவிர்த்து நன்மை பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், ஆரஞ்சு, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 3, 8, 9.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை சுப்ரமணியரை வணங்கி, சிவப்பு நிற பூ வைத்து, நெய் தீபமிட்டு வணங்கி வெற்றியை பெறுவீர்கள்.
 
மகரம்
 
எப்பொழுதும் கஷ்டங்கள் சுமையாக இருப்பதாக கருதி முயற்சிகளை விட்டுவிடாதீர்கள். எதையும் மனஉறுதியுடன் எடுத்துச் செயல்பட்டால் நினைத்தபடி வெற்றி கிட்டி உங்களின் வளர்ச்சியை எட்டுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - நீலம், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 1, 6, 8.
பரிகாரம் - வியாழக்கிழமை 6 - 7 மணிக்குள் விநாயகருக்கு கதம்ப மாலை சாத்தி, தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வர சகல காரியமும் சித்தியாகும்.
 
கும்பம்
 
மனதைரியமும், துணிச்சலும் உங்களின் முயற்சிகளில் நினைத்தபடி செயல்பட வைக்கும். தொழில் சரிவில்லாத நிலையை அடைய கவனமுடன் செயல்படுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - நீலம், ஆரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 6, 8, 9.
பரிகாரம் - ஞாயிறு ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும், மிளகை கருப்புத் துணியில் தீபம் போட்டு வேண்டுதல் நன்மை தரும்.
 
மீனம்
 
தொடர்ந்து சாதனைகளை செய்ய தூண்டுதல் இருக்கும். வளர்ச்சியை எட்ட உதவிகள் கிடைக்கும். தொழிலில் போட்டிகள் நீங்கி உங்கள் முயற்சிகள் வெற்றியை தரும்.
 
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், ஆரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 9.
பரிகாரம் - செவ்வாய் கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு, மஞ்சள் கரை துண்டு அணிவித்து விளக்கு போட்டு வர நன்மை கிடைக்கும்.

கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
R.ஆனந்தன்
91-9289341554