விருச்சிக ராசிக்கான பலன்கள்

விருச்சிக ராசிக்கான பலன்கள்

கடந்த நான்கு வருடங்களாக விருச்சிக ராசிக்காரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற வேதனைகளும், துயரங்களும் மிக அதிகம்.

கடந்த சில மாதங்களாக அலுவலகத்தில் நான் உள்ளே நுழைந்ததும் பார்க்கின்ற முதல் ஜாதகர் நிச்சயம் விருச்சிக ராசிக்காரராகத்தான் இருப்பார். நிறைய முறை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உள்ளே நுழைந்ததுமே நீங்கள் விருச்சிகம்தானே என்று எத்தனையோ பேரைக் கேட்டிருக்கிறேன். பனிரெண்டு ராசிகளில் விருச்சிகத்திற்கு மட்டுமே ஏழரைச் சனியாக சனிபகவான் ஆரம்பிக்கும் போதே உச்சநிலையில் வருவதால் சனியின் ஆரம்பத்திலேயே கெடுபலன்கள் விருச்சிகத்திற்கு நடக்கத் தொடங்கி விடுகின்றன. இந்தமுறை விருச்சிகத்தினர் எதையும் சமாளிக்க முடியாமல் திணறித்தான் போனீர்கள். 2017-ம் வருடம் விருச்சிகத்தின் வேதனைக்கு முடிவு கட்டும் வருடமாக இருக்கும். கடும் இழப்பு, நெருங்கியவரின் பிரிவு, துயரம், கடன், ஆரோக்கிய குறைவு, மன அழுத்தம், வேலையில், தொழிலில் சிக்கல், வழக்கு போன்ற எல்லாவிதமான கெடுபலன்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடத்துடன் அனைத்தும் ஒரு முடிவிற்கு வரும்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!