கன்னி ராசிக்கான பலன்கள்

கன்னி ராசிக்கான பலன்கள்

கன்னி ராசிக்காரர்களுக்கு 2017-ம் வருடம் சென்ற வருடத்தை விட மிகவும் நல்ல பலன்கள் கொடுக்கின்ற வருடமாக இருக்கும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வருட ஆரம்பத்தை விட ஆண்டின் பிற்பகுதியில் கிரக அமைப்புகள் நல்லமுறையில் அமைந்திருப்பதால் உங்களுடைய தொழில்துறை முன்னேற்றங்களுக்கு ஏற்ற வருடமாக இது அமையும். ஆகஸ்ட் மாதம் 18 ம்தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ராகு பகவான் மிகவும் நல்லபலன்களை தரக்கூடிய பதினொன்றாமிடத்திற்கு மாறுவது கன்னி ராசிக்கு ஒரு மிகச்சிறந்த அமைப்பு. குறிப்பாக இம்முறை ராகு தனக்கு மிகவும் பிடித்த வீடான கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். கடகத்தில் ராகு மூன்று, பதினொன்றாமிடங்களாக அமரும் நிலையில் மிகப்பெரிய லாபங்களை தருவார் என்பது ஜோதிட விதி. அதன்படி பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறை வருகின்ற வாய்ப்பான ஒரு நல்ல கோட்சார நிலை உங்களுக்கு இன்னும் சில மாதங்களில் வர இருகிறது.

இந்த ஆண்டின் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் அபரிமிதமான தொழில் முன்னேற்றங்களையும், பொருளாதார லாபங்களையும், பணவரவுகளையும் கன்னிராசிக்காரர்கள் எதிர்கொண்டு சந்தோஷப்படுவீர்கள். உங்களில் சிலருக்கு இந்தவருடம் மேற்கு நாடுகளுக்கு வேலை, தொழில் விஷயமாக பயணப்படுதலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வேலை அமைதலும் இருக்கும். இன்னும் சிலருக்கு முஸ்லிம், கிறித்துவ நண்பர்கள், அமைப்புகள், பங்குதாரர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பிறப்பால் முஸ்லிம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதத்தினர் மூலம் நல்லவைகள் நடக்கும்.

ராகுபகவான் பிறந்த ஜாதகத்திலோ, கோட்சார நிலையிலோ யோகநிலையில் அமரும்போது மறைமுகமான வழிகளில் அளவற்ற செல்வத்தைத் தந்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவார். அதன்படி இம்முறை அவர் அதிர்ஷ்டம் தரும் அமைப்பில் கன்னி ராசிக்கு வர இருப்பதால் சாதுர்யமான வழிகளில் உங்களை ஈடுபடுத்தி தனலாபத்தைத் தருவார்.

ராகு-கேது பெயர்ச்சியை அடுத்து இதுவரை உங்கள் ராசியில் ஜென்ம குருவாக நிலை கொண்டு தொழிலிடங்களில் உங்களுக்குத் தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் குருபகவானும் செப்டம்பர் மாதம் 12 ம் தேதி நடக்க இருக்கும் பெயர்ச்சியின் மூலம் பொருள்வரவையும், தனலாபத்தையும் தரும் இரண்டாமிடத்திற்கு மாற இருகிறார். இந்தக் குருப்பெயர்ச்சியால் கன்னிராசிக்காரர்களுக்கு பொருளாதார மேன்மை கிடைக்கும். இதுவரை திருமணம் நடைபெறாத இளைய பருவத்தினருக்கு குடும்பம் மற்றும் நல்ல வேலை அமைந்து வாழ்க்கையில் செட்டிலாவீர்கள். உங்களுக்கு நல்ல யோகம் தரும் குருப்பெயர்ச்சி இது. வருடத்தின் இறுதியான அக்டோபர் 26 ம் தேதி நடக்க இருக்கின்ற குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலனைக் கொடுக்காது என்றாலும் குருவின் வீட்டில் சுபத்துவமாக அமரும் சனிபகவான் கண்டிப்பாக கெடுதல்களைத் தர மாட்டார். மேலும் உங்களின் ராசிக்கு சனி யோகாதிபதி என்பதால் எப்போதுமே கன்னியின் மேல் சனிக்கு ஒரு மென்மையான போக்கு சனிக்கு உண்டு. ஆகவே இந்த வருடம் நடக்க இருக்கின்ற மிக முக்கியமான கிரகப்பெயர்ச்சிகளில் மிக முக்கியமான இரண்டு நிகழ்வுகள் கன்னி ராசிக்கு யோகம் தரும் அமைப்பில் இருப்பதால் பிறக்க இருக்கும் புத்தாண்டு உங்களுக்கு நன்மைகளையும், மேன்மைகளையும் மட்டுமே தரும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.