தனுசு ராசிக்கான பலன்கள்

தனுசு ராசிக்கான பலன்கள்

தனுசு ராசிக்கு 2017-ம் வருடம் மாற்றங்கள் உள்ள வருடமாக இருக்கும். அந்த மாற்றங்கள் உங்களின் எதிர்காலத்திற்கு நன்மைகளைச் செய்வதாக அமையும். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு ஏற்றங்களைத் தருவதற்கான வாய்ப்புகள் அமையும் வருடம் இது.

வருடத்தின் பிற்பகுதியில் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியில் ராகுபகவான் எட்டாமிடத்திற்கும் கேது இரண்டாமிடத்திற்கும் மாறுகிறார். இந்தப் பெயர்ச்சியினால் உங்களின் வேலை, தொழில், வீடு, அலுவலகம் போன்றவைகளில் உங்களுக்கு மாறுதல்கள் இருக்கும். நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களும், எட்டாமிடமும் ஜோதிடத்தில் மாறுதல்களைக் குறிப்பவை. அஷ்டமஸ்தானம் எனப்படும் எட்டில் வரும் சாயாக் கிரகங்களால் ஒருவருக்கு அனைத்து நிலைகளிலும் மாற்றங்கள் இருக்கும். இந்த அமைப்பால் உங்களில் சிலர் வேலை அல்லது தொழில் விஷயமாகவோ திருமண அமைப்பாலோ இருக்கும் இடத்தை விட்டு தூர இடங்களுக்குச் செல்வீர்கள். செப்டம்பர் மாதம் 12-ம் தேதியன்று நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிநாதன் குருபகவான் மிகவும் யோகம் தரும் பதினொன்றாம் வீட்டிற்கு மாறுவதால் பொருளாதார பிரச்சினைகளை வருடப் பிற்பகுதியில் சுலபமாக கையாள முடியும். இந்தப் பெயர்ச்சியின் மூலம் இதுவரையில் உங்கள் வேலை தொழில் வியாபாரம் போன்றவைகளில் இருந்து வந்த பின்னடைவுகள், வருமானக் குறைவு இனிமேல் இருக்காது. குருவின் மாறுதலால் அவரவரின் தகுதிநிலைக்கேற்பவும் இருக்கும் இடத்தைப் பொருத்தும் பணவரவு உண்டு. எனவே வருடத்தின் பிற்பகுதியில் தாராள வருமானம் இருக்கும் என்பதால் புத்தாண்டின் ஆரம்பத்திலேயே இதுவரை உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கி வரும் பிரச்சினைகள் படிப்படியாகவும் நல்லபடியாகவும் முடிவுக்கு வரும். முக்கியமான ஒரு கருத்தாக தனுசுக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது.