ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2022 - கும்பம்

ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2022 - கும்பம்

காலத்தின் நிலைக்கேற்ப சூழலை மாற்றிக் கொள்ளும் கும்ப ராசி வாசகர்களே!

 
இதுவரை உங்களின் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும், லாபஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்களை கிடைக்கவிடாமல் பல்வேறு இடையூறுகளையும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் செய்தது, பேசுவது சிறு காரியமாக இருந்தாலும் கடுமையான போராட்டத்தின் முடிவில் அமையும். இனிவரும் 01.09.2020 முதல் ராகு / கேது பெயர்ச்சியாகி ராகு நான்காமிடத்திலும், கேது பத்தாமிடத்திலும் அமர்வது உங்களின் நீண்டநாள் காரியங்கள் செயல்படதுவங்கும். ராகு சுகஸ்தானத்தில் அமர்ந்து சுறுசுறுப்பாக செயல்பட செய்வதுடன் இன்றைய கால சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி உங்களின் நிலையை மாற்றிக்கொள்வீர்கள். வீடுகட்டுதல், வாகனம் வாங்கும் யோகம், ஏற்கனவே இருக்கும் வீட்டை மொடர்னாக மாற்றுதல் போன்ற காரியங்கள் நடக்கும் உங்களின் தொழிலில் பலமாதம் முடங்கிய நிலைமாறி நன்மை உண்டாகும். வெளிநாட்டு வர்த்தகம் சார்ந்த முயற்சிகள் நல்ல பலனை தரும். எதிர்கால திட்டங்களுக்கு உங்களின் செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். ராணுவம், காவல் துறைகளில் பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். தொடர்ந்து கஷ்டப்பட்டாலும் அதற்கு தகுந்த நல்லபலன்களும் உங்களுக்கு கிடைக்கும்.
 
இனி ராகு மிருகசீரிட நட்சத்திரத்தில் அமரும் காலம் உங்களுக்கு சுயமுயற்சிகளுக்கு நல்லபலன் கிட்டும். நீங்கள் தொடுத்த பல காரியங்கள் பல நாட்களால் கிடப்பில் கிடந்த நிலைமாறி நன்மை பெறுவீர்கள். வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். முக்கிய பணிகளில் திடடமிட்டபடி செயல்படுவீர்கள். இளைய சகோதரரின் உதவி கிடைக்கும். விரைய குரு கஷ்டங்களை தந்தாலும் உங்களில் ராசிநாதன் உங்களுக்கு உதவிகளை செய்து நிலைமையை சரி செய்வார்.
 
ரோகிணி நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் தாயார் உடல்நிலை கவனம் செலுத்தவேண்டி வரும். அரசியலில் தனி செல்வாக்கு உண்டாகும். மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கும். வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு இருக்கும். புத்திரிகளுக்கு திருமண வாய்ப்புகள் அமையும்
 
பணபுழக்கம் தராளமாக இருக்கும். வசதிளை பெருக்கி கொள்வீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் உங்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் அமையும். அரசாங்க காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து தருவீர்கள். பொது விடயங்களில் உங்களின் பங்கு பயனுள்ளதாக அமையும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.
 
இனி கேது கேட்டை நட்சத்திரத்தில் அமரும் காலம் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிவரும். உயர்கல்வியின் சிலருக்கு கவனமாக இருக்கவேண்டிவரும். போட்டிகள் பல இருந்தாலும் உங்களின் தனிகவனம் இருந்தால் வெற்றி பெறலாம். கணணி, ஒன்லைன் வர்த்தகம், வெளிநாட்டு பொருட்கள் விற்பனை மூலம் லாபம் பெறுவர். தாய்வழி உறவுகள் சச்சரவு இருக்கும். பேச்சிலும், செயலிலும் அதிகாரமும், ஆணவமும் கலந்திருக்கும். எதிர்கால திட்டத்தை செயல்படுத்துவீர்கள்.
 
அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் தொழிலாளர்களிடம் ஒற்றுமையின்மையும் பல இடங்களில் போட்டி மனப்பான்மையும். பணியை பகிர்ந்து கொள்வதில் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். இதின் சமரசம் செய்து கொள்வதில் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். புதிய ஒப்பந்தங்களை கலைதுறையினர் உருவாக்கி கொள்வீர்கள். சாதனைகளை செய்து வாழ்த்துக்களை பெறுவீர்கள்.