ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2022 - மகரம்

ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2022 - மகரம்

வளமான எதிர்காலத்திற்காக காத்திருக்கும் மகர ராசி வாசகர்களே!

 
இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் கேதுவும், ஆறாமிடத்தில் ராகுவும் அமர்ந்து பல அனுபவங்களை பெற்று திகழ்ந்தீர்கள். எதிர்பாராத வருமானம், அதற்கு தகுந்த செலவு என்று வரவும் செலவும் பகிர்ந்துகொண்டீர்கள். பல எதிர்ப்புகளை சந்தித்து அனைத்தையும் சமாளித்து வெற்றிகண்டீர்கள். இனி வரும் 01.09.2020 அன்று முதல், உங்களின் ராசிக்கு ராகு பூர்வ புண்ணியஸ்தானத்திலும், லாப ஸ்தானத்தில் கேதுவும் அமர்வதால் தனி திறமையுடன் செயல்படுவீர்கள். அரசியலிலும், ஆன்மீகத்திலும் உங்களின் நாட்டம் சிறப்பாக அமையும். புதிய சகாப்தத்தை உருவாக்கிட முயற்சிகளை செய்வீர்கள். சொந்த வீடு கட்டும் வாய்ப்பை பெறுவீர்கள். பல காலம் உங்களின் காதலை சொல்லாமல் இருந்துவிட்டு இப்பொழுது வெளிபடுத்துவீர்கள் பகை கொண்டவர்கள் இனி உறவு கொள்வார்கள். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு அது அமையும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுத்து நல்ல பலன் பெறும் வாய்ப்புகள் அமையும். கடல் கடந்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக அமையும் கேது லாபஸ்தானத்தில் நீசம் பெறுவதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பலன்களும் கிடைக்க பெறுவீர்கள். சொத்து பிரச்சனைகள் பேசி தீர்க்கும் வாய்ப்பு அமையும் கலைஞர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.
 
இனி ராகு மிருகசீரிட நடசத்திரத்தில் அமரும் காலம் உங்களின் வாழ்க்கை சூழ்நிலையில் பல மாற்றம் உண்டாகும். பதவிகளுக்கு பலரின் பகையை வளர்த்து கொண்டாலும், இறுதியில் வெற்றி உங்களுக்கு அமையும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு திருமண தடை நீங்கி திருமண வாய்ய்பு கிட்டும். புதிய தொழில் துவங்குவது சம்மந்தமான விடயங்களில் சந்திப்புகள் பலன்தரும். விளையாட்டுதுறையில் சிலர் சாதனைகளை நடத்தி காட்டுவார்கள். 
 
ராகு ரோகிணி நட்சத்திரத்தில் அமரும் காலம் பெண்களின் வாழ்க்கையில் சோதனை உண்டாகலாம். ஆண்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. அதிக நெருக்கம் ஆபத்தாக அமையும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. தாயார் உடல்நலனில் கவனம் தேவை. அரசியலில் உங்களின் எதிர்பார்ப்பு நன்மையை தரும். காலம் கடந்த சிந்தனைகளால் பலன் தராது என்பதால் யோசித்து செயல்படுவது நல்லது. கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் அரசியலில் தனித்திறமை கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோசம் பொங்கும். கவலைகளை மறந்து சுபிட்சம் அடைவீர்கள். ஆடம்பர வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.
 
இனி கேது கேட்டை நட்சத்திரத்தில் அமரும் காலம் புத்திசாலி நண்பர்கள் சேர்க்கையும். புதிய தகவல்களை பெறும் வாய்ப்பும் அமையும் வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளுக்கு நல்லபலன் கிடைக்கும். செய்யும் தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். உங்களை மதித்து நடப்பவருக்கு மரியாதை தருவீர்கள். பிறருக்கு அதை தெரியப்படுத்தி காட்டுவீர்கள். 
 
அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் தொழில் சார்ந்த பணிகளுக்கு வெளி இடங்களில் தங்கும் சூழ்நிலை உருவாகும். வெளிநாடு பயணம் செல்லும் வர்த்தகம் சார்ந்த வெளியூர் பயணப் பயனுள்ளதாக அமையும். அரசியலில் புதிய பதவிகளை வகிக்கும் சூழ்நிலை உருவாகும் அமைதியான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வீர்கள். சிலநேரம் விட்டுகொடுத்து நற்பெயர் பெறுவீர்கள். விசாக நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் திடீர் அதிர்ஷ்டமும் எதிர்பாரான வரவும் கிடைக்கும்.