புரட்டாசி மாதம் விருச்சிக ராசிகாரர்களுக்கான பலன்கள்!

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும், அண்டை அயலாருடன் தகராறு உண்டாகும்... புதன் 02ம் தேதி முதல் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பின்னர் செலவுகளில் கவனம் தேவை. குரு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் 25ம் தேதிக்குப் பின்னர் மனதில் நிம்மதி உண்டாகும்.. சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும், மனைவியுடன் பிரிவினை உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விதண்டாவாதத்தை தவிர்க்கவும், பண வரவில் தடை உண்டாகும்.. ராகு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கேது மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும்.