புரட்டாசி மாதம் துலாம் ராசிகாரர்களுக்கான பலன்கள்!

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், அரசாங்க நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும், புதிதாக நிலம் வாங்குவீர்கள்.. புதன் 2ம் தேதி முதல் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பின்னர் புத்தி கூர்மை அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் 25ம் தேதிக்குப் பின்னர் வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.. சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், புதிதாக பொன்னகைகள் வாங்குவீர்கள். சனி மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும்.அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். ராகு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும்.