புரட்டாசி மாதம் சிம்ம ராசிகாரர்களுக்கான பலன்கள்!!

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வகையில் பிரச்சினை உண்டாகும், உடன் பிறப்புகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும்.. புதன் 2ம் தேதி முதல் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சமயோசிதமாகப் பேசி காரியம் சாதித்துக் கொள்வீர்கள் 20ம் தேதிக்குப் பின்னர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தாருடன் நல்லுறவு நீடிக்கும் 25ம் தேதிக்குப் பின்னர் மனதில் அமைதி அதிகரிக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்படும்.. சனி ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷய்ங்களில் ஆர்வம் அதிகரிக்கும், குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். . ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் ஏற்படும். கேது ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும்.