புரட்டாசி மாதம் ரிஷப ராசிகாரர்களுக்கான பலன்கள்!

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்,. பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துகளில் பங்கு கிடைக்கும், அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதன் 2ம் தேதி முதல் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும் 20ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனுடன் பிரச்சினை அதிகரிக்கும். குரு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும் 20ம் தேதிக்குப் பின்னர் பண வரவு அதிகரிக்கும்.. சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு ஏற்படும், கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். சனி எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் ஏற்படும், மனதில் பாரம் அதிகரிக்கும்.. ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும். கேது ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.