புரட்டாசி மாதம் மேஷ ராசிகாரர்களுக்கான பலன்கள்!

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும், அப்பாவிடம் சச்சரவைத் தவிர்க்கவும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் 2ம் தேதி முதல் ஆறாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் 20ம் தேதிக்குப் பின்னர் வியாபாரம் விருத்தியாகும். குரு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும் 25ம் தேதிக்குப் பின்னர் குழந்தைகளால் மனக் கஷ்டம் ஏற்படும்.. சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.. சனி ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், அப்பாவின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.. ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். கேது பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்களில் கவனம் தேவை.