புரட்டாசி மாதம் மீன ராசிகாரர்களுக்கான பலன்கள்!

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும், உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் பண வரவு அதிகரிக்கும், சகோதரர்களால் நன்மை உண்டாகும்.. புதன் 2ம் தேதி முதல் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும், தாய் மாமனின் உதவி கிடைக்கும். குரு எட்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும், 25ம் தேதிக்குப் பின்னர் பண வரவு சரளமாக இருக்கும்.. சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை, விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும்.. சனி பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும், முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும்.. ராகு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன எண்ணங்கள் நிறைவேறும்.