புரட்டாசி மாதம் மகர ராசிகாரர்களுக்கான பலன்கள்!

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும், மனதில் எரிச்சல் அதிகரிக்கும். புதன் 2ம் தேதி முதல் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும், வியாபாரம் விருத்தியாகும்.. குரு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும், 25ம் தேதி முதல் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும், முயற்சிகள் வெற்றி பெறும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும், வெளியூர் தொழில் தொடர்புகள் சிறப்படையும். . ராகு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் பிரச்சினையைத் தவிர்க்கவும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும்.